Rosemary for Hair Growth : முடி உதிர்வை மொத்தமாக நிறுத்தும் 'ரோஸ்மேரி' 'இப்படி' யூஸ் பண்ணா முடி நல்லா வளரும்!

Published : Nov 27, 2025, 06:01 PM IST

தலைமுடி உதிர்தலை நிறுத்தி, அடர்த்தியாக வளர ரோஸ்மேரி இலையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.

PREV
14
Rosemary for Hair

தற்போது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, தவறான உணவு பழக்கங்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவற்றால் நம்முடைய ஆரோக்கியம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், கூந்தல் தொடர்பான பிரச்சனைகளும் அதிகரிக்கிறது. முடி உதிர்தலை கட்டுப்படுத்த பலரும் பலவிதமான ஷாம்பூ, கண்டிஷனர், எண்ணெய் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவை எல்லாவற்றையும் விட ரோஸ்மேரி இலை மட்டும் போதும். ரோஸ்மேரி இலை முடி உதிர்தலை நிறுத்தி, முடி அடர்த்தியாக வளர பெரிதும் உதவுகிறது. அது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

24
முடி அடர்த்தியாக வளர ரோஸ்மேரி எவ்வாறு உதவுகிறது?

ரோஸ்மேரி இலையில் உள்ள கார்சினிக் மற்றும் ரோஸ்மரினிக் அமிலம் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வேர்களை வலுப்படுத்தும். இது அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. 

34
ரோஸ்மேரி இலை

இதற்கு ரோஸ்மேரி தண்ணீரை உச்சந்தலையில் பயன்படுத்தவும். உச்சந்தலையில் இதை தெளித்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களிலே நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.

44
ரோஸ்மேரி தண்ணீரை தயாரிப்பது எப்படி?

உலர்ந்த ரோஸ்மேரி இலைகளைக் கொண்டு வீட்டிலேயே ரோஸ்மேரி தண்ணீர் தயாரிக்கலாம். ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் ரோஸ்மேரி இலைகளைச் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும். பின் வடிகட்டி, ஆறவைத்து, ஸ்ப்ரே பாட்டிலில் சேமித்து தினமும் பயன்படுத்தலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories