hair care tips: அசுர வேகத்தில் முடி வளர்ச்சிக்கு உதவும் அசத்தலான 6 வகை முட்டை மாஸ்க்

Published : May 22, 2025, 10:45 AM IST

வேகமாக முடி வளர வேண்டும். அடர்த்தியாக, ஆரோக்கியமாக வளர வேண்டும் என ரொம்ப மெனக்கெடுகிறீர்களா? உங்களுக்காக சூப்பரான 6 வகையான முட்டை மாஸ்க் ஐடியாக்கள் இருக்கும். இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி வளர்ச்சியை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீங்க.

PREV
112
முட்டை மற்றும் ஆலிவ் ஆயில் மாஸ்க்:

முட்டையின் புரதச்சத்துடன் ஆலிவ் எண்ணெயின் ஈரப்பதமூட்டும் பண்புகள் முடி வேர்களுக்கு ஊட்டமளித்து, வறண்ட மற்றும் சேதமடைந்த கூந்தலுக்கு பளபளப்பைக் கொடுக்கிறது. இது முடி உடைவதைக் குறைத்து, வளர்ச்சியைத் தூண்டுகிறது. ஆலிவ் ஆயில் உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது.

212
தேவையான பொருட்கள்:

முழு முட்டை - 1 ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் முட்டை மற்றும் ஆலிவ் ஆயிலை சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை உங்கள் உச்சந்தலை மற்றும் முடி முழுவதும் தடவி 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை ஊறவிடவும். பிறகு குளிர்ந்த நீரில் மென்மையான ஷாம்பு கொண்டு அலசவும். இதனை வாரத்திற்கு 1-2 முறை செய்து வரவும்.

312
முட்டை மற்றும் தேங்காய் எண்ணெய் மாஸ்க்:

தேங்காய் எண்ணெய் முடிக்கு ஆழமான ஈரப்பதத்தை அளித்து, புரத இழப்பைக் குறைக்கிறது. முட்டையுடன் சேரும்போது, இது முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்து, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இது உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுநோய்களையும் கட்டுப்படுத்த உதவுகிறது.

412
தேவையான பொருட்கள்:

முழு முட்டை - 1 தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

முட்டை மற்றும் தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை முடி வேர்கள் முதல் நுனி வரை தடவி 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை ஊறவிடவும். பிறகு குளிர்ந்த நீரில் மிதமான ஷாம்பு கொண்டு அலசவும். இதனை வாரத்திற்கு 1 முறை செய்து வரவும்.

512
முட்டை மற்றும் வெங்காய சாறு மாஸ்க்:

வெங்காய சாற்றில் உள்ள சல்பர் முடி வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது. இது முடி வேர்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்துகிறது. முட்டையுடன் சேரும்போது, முடி வளர்ச்சிக்கு மேலும் பலம் சேர்க்கிறது. இது முடி உதிர்வை வெகுவாகக் குறைக்கும்.

612
தேவையான பொருட்கள்:

முழு முட்டை - 1 வெங்காய சாறு - 2 தேக்கரண்டி

செய்முறை:

முட்டை மற்றும் வெங்காய சாற்றை சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை உச்சந்தலையில் மட்டும் தடவி 30-45 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு மிதமான ஷாம்பு கொண்டு அலசி, வெங்காய வாசனையை நீக்க conditioner பயன்படுத்தவும். இதனை வாரத்திற்கு 1 முறை மட்டும் செய்து வரவும்.

712
முட்டை மற்றும் யோகர்ட் மாஸ்க்:

யோகர்ட்டில் உள்ள லாக்டிக் அமிலம் உச்சந்தலையை சுத்தம் செய்து, முடியை மென்மையாக்கும். இது பொடுகு மற்றும் அரிப்புகளைக் குறைக்கும். முட்டையுடன் இணைந்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் முடிக்கு பளபளப்பைக் கொடுக்கிறது. இது முடிக்கு ஈரப்பதத்தை அளித்து, சுருள் முடி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

812
தேவையான பொருட்கள்:

முழு முட்டை - 1 புளிப்பில்லாத யோகர்ட் (தயிர்) - 3 தேக்கரண்டி

செய்முறை:

முட்டை மற்றும் யோகர்ட்டுடன் நன்கு கலக்கவும். இந்த கலவையை உங்கள் உச்சந்தலை மற்றும் முடி முழுவதும் தடவவி 30-45 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு குளிர்ந்த நீரில் மென்மையான ஷாம்பு கொண்டு அலசவும். இதனை வாரத்திற்கு 1 முறை மட்டும் செய்து வரவும்.

912
முட்டை மற்றும் கற்றாழை மாஸ்க்:

கற்றாழை முடி வளர்ச்சிக்கு உதவும் என்சைம்களைக் கொண்டுள்ளது. இது உச்சந்தலைக்கு ஊட்டமளித்து, pH சமநிலையை சீராக்கி, பொடுகு தொல்லையைக் குறைக்கும். முட்டையுடன் சேரும்போது, இது முடி உதிர்வை தடுத்து, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இது முடிக்கு நல்ல கண்டிஷனராகவும் செயல்படுகிறது.

1012
தேவையான பொருட்கள்:

முழு முட்டை - 1 ஃப்ரஷ் கற்றாழை ஜெல் - 2 தேக்கரண்டி

செய்முறை:

முட்டை மற்றும் கற்றாழை ஜெல்லை நன்கு கலக்கவும். இந்த கலவையை உச்சந்தலை மற்றும் முடி முழுவதும் தடவி 30-45 நிமிடங்கள் ஊறவிடவும்.பிறகு குளிர்ந்த நீரில் மென்மையான ஷாம்பு கொண்டு அலசவும். பயன்பாடு: இதனை வாரத்திற்கு 1-2 முறை செய்து வரவும்.

1112
முட்டை மற்றும் அவகேடோ மாஸ்க்:

அவகேடோவில் உள்ள வைட்டமின் E, K, B மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் முடிக்கு ஊட்டமளித்து, வலுப்படுத்த உதவுகின்றன. இது வறண்ட, சேதமடைந்த கூந்தலுக்கு ஆழமான கண்டிஷனிங் அளித்து, முடி உடைவதைக் குறைத்து, முடி வளர்ச்சியைத் தூண்டும். முட்டையுடன் சேரும்போது, முடிக்கு மிருதுவான மற்றும் பளபளப்பான தோற்றத்தைக் கொடுக்கும்.

1212
தேவையான பொருட்கள்:

முழு முட்டை - 1 அரை பழுத்த அவகேடோ

செய்முறை:

அவகேடோவை மசித்து, அதனுடன் முட்டையைச் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் உச்சந்தலை மற்றும் முடி முழுவதும் தடவி 30-45 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு குளிர்ந்த நீரில் மென்மையான ஷாம்பு கொண்டு அலசவும். இதனை வாரத்திற்கு 1 முறை மட்டும் செய்து வரவும்.

Read more Photos on
click me!

Recommended Stories