கோடையில் சருமம் பளபளக்க மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்க..

Published : May 16, 2025, 06:51 PM IST

கோடை காலத்தில் பளபளப்பான சருமத்தை பெற மஞ்சள் கட்டியை பயன்படுத்துவது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

PREV
16
Raw Turmeric Benefits For Skin in Summer

கோடைக்காலம் என்பதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இந்த சுற்றறிக்கும் வெயிலில் சன் ஸ்கிரீன் இல்லாமல் வெளியே செல்ல முடியாது. ஆனால் சில சமயங்களில் சன் ஸ்கிரீன் பயன்படுத்தினாலும் சருமத்திற்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன இதனால் சருமத்தின் நிறம் மாறி அதன் இதற்கான பொலிவை இழந்து எரிச்சலை ஏற்படுகிறது.

26
மஞ்சள் கட்டி

இத்தகைய சூழ்நிலையில், வீட்டில் இருக்கும் இயற்கை பொருள் ஒன்று உங்களுக்கு சிறந்த தீர்வை வழங்கும். அது எதுவென்றால் மஞ்சள் கட்டியை தான். ஆம் மஞ்சளில் ஆக்சிஜனேற்ற மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சருமத்தின் இழந்த பொலிவை மீண்டும் பெற உதவும்.

36
சருமத்திற்கு மஞ்சள் கட்டி ஏன்?

மஞ்சளில் இருக்கும் குருவின் சரும அலர்ஜியை குறைக்க உதவுகிறது. மேலும் இது சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்கவும், வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சருமத்தை புத்துணர்ச்சியுடனும், சருமத்திற்கு இயற்கையான பளபளப்பையும் தர உதவுகிறது.

46
சருமத்திற்கு மஞ்சளின் நன்மை;

- மஞ்சளில் இருக்கும் அலர்ஜு எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் இருக்கும் தடிப்புகள், எரிச்சல், சிவத்தல் போன்றவற்றை குணமாக்கும். மேலும் சருமத்தை ஆரோக்கியமாகவும் உள்ளிருந்து பளபளப்பாகவும் மாற்றும்.

- சருமத்தில் அதிகப்படியான சரும சுரப்பால் சருமம் சீக்கிரமாகவே எண்ணெய் பசையாகவும், அழுக்காகவும் மாறிவிடும். அதுமட்டுமின்றி முகப்பருக்கள், தடிப்புகள் போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். எனவே இதை கட்டுப்படுத்த மஞ்சள் பெரிதும் உதவும்.

56
சருமத்திற்கு மஞ்சளின் நன்மை;

- மஞ்சளில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் எந்தவித பாக்டீரியா தொற்றும் ஏற்படாமல் பாதுகாக்கும்.

- சூரிய ஒளியின் தாக்கத்தால் சருமத்தில் கரும்புள்ளிகள் மற்றும் நிறம் மாற்றம் ஏற்படும். இந்த பிரச்சனையை உள்ளிருந்து படிப்படியாக குறைக்கவும், சருமத்தை பொலிவாக வைக்கவும் மஞ்சள் உதவுகின்றது.

- மஞ்சள் கொலாஜான் உற்பத்திக்கு உதவுவதால் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை தரும் மேலும் சருமத்தில் சீக்கிரமே வயதான அறிகுறிகள் தோன்றுவதை தடுக்கும்.

66
பொலிவான சருமம் பெற மஞ்சள் கட்டியை பயன்படுத்துவது எப்படி?

முதலில் ஒரு சிறிய மஞ்சள் துண்டை பொடியாக்கிக் கொள்ளுங்கள். அதை ஒரு கப் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து பின் அடுப்பை அணைத்து விட்டு, சுமார் ஐந்து நிமிடம் மூடி வைக்கவும். பிறகு அதை வடிகட்டி அந்த நீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு மிளகு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து குடியுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories