மஞ்சள் மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்குகள் பல ஆண்டுகளாக முகத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது. ஆனால், இந்த இரண்டில் எது நம் முகத்திற்கு உடனடி பொலிவைத் தரும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
கடலை மாவு மற்றும் மஞ்சள் சமையலுக்கு மட்டுமல்ல, சருமப் பராமரிப்புக்கும் உகந்தது. இது பரு, கரும்புள்ளிகளை நீக்கி, சரும நிறத்தை மேம்படுத்தும். ஆனால், இந்த இரண்டில் எது உடனடி பொலிவைத் தரும் எனப் பார்ப்போம்.
24
கடலை மாவு ஃபேஸ் பேக்
கடலை மாவு ஒரு இயற்கையான க்ளென்சராக செயல்படுகிறது. இது முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அதிகப்படியான எண்ணெயை அகற்றி, சருமத்தை மென்மையாக்கி உடனடியாகப் பொலிவு பெறச் செய்கிறது.
34
மஞ்சள் ஃபேஸ் பேக்
மஞ்சளில் உள்ள பண்புகள் பருக்கள், கரும்புள்ளிகளைக் குறைத்து, முகத்தின் மந்தத்தன்மையை நீக்கும். இது சருமத்தை பிரகாசமாக்கி, புத்துணர்ச்சியுடன் வைக்கும். மணப்பெண்களுக்கு ஏற்றது.
உடனடி பொலிவுக்கு கடலை மாவு சிறந்தது. இது அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்தி, சருமத்தை உடனடியாகப் பிரகாசிக்கச் செய்யும். நீண்ட கால ஆரோக்கியத்திற்கு மஞ்சள் நல்லது.