Foods for Hair Loss : இந்த '5' உணவுகள் முடி கொட்டுறத அதிகரிக்கும் இனிமேல் குறைச்சுக்கோங்க

Published : Dec 05, 2025, 01:32 PM IST

உங்களுக்கு முடி வழக்கத்தை விட அதிகமாக கொட்டினால் சில உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை முடி உதிர்தலை இன்னும் அதிகமாக்கும்.

PREV
17
Foods for Hair Loss

முடி உதிர்தலை ஆண்கள் பெண்கள் என இருவரும் அதிகமாக எதிர்கொள்கின்றனர். அதிலும் ஆண்களுக்கு முடி உதிர்தல் தீவிரமாகும் போது வழுக்கை ஏற்படுத்தும். மன அழுத்தம், மாசுபாடு ஆகியவை முடி உதிர்வதை ஊக்குவிக்கும். இது தவிர சில உணவுகளும் முடி உதிர்தல் பிரச்சினைக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக இருந்தால் அந்த சமயத்தில் சில உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அவை முடி உதிர்தலை வேகமாக்கிவிடும். எனவே, இந்த பதிவில் முடி உதிர்தலின் போது என்னென்ன உணவுகள் சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.

27
சர்க்கரை

சர்க்கரை, சாக்லேட், கூல் ட்ரிங்க்ஸ், இனிப்பு பண்டங்கள் போன்றவை சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும் அவை தலை முடிக்கு நல்லதல்ல. ஏனெனில் அதில் இருக்கும் சர்க்கரை இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரித்து ஹார்மோன் சமநிலைமையை ஏற்படுத்தும். இதன் விளைவாக முடி உதிர்தல் அதிகரிக்கும்.

37
ஜங்க் ஃபுட் :

பீட்சா, பர்கர், பிரஞ்சு பொரியல் போன்ற ஜங்க் ஃபுட் உணவுகளில் நிறைவேற்ற கொழுப்புகள் அதிகமாகவே உள்ளன. அவை செபாசியஸ் சுரப்பிகளை அடைத்து உச்சந்தலையில் பொடுகு மற்றும் தொற்றுக்களை உண்டாக்கும். இதன் விளைவாக முடி பலவீனமடைந்து உதிர ஆரம்பிக்கும்.

47
உயர் கிளைசெமிக் குறியீட்டு உணவுகள் :

வெள்ளை ரொட்டி, சுத்திகரிக்கப்பட்ட மாவு, சர்க்கரை, பாஸ்தா போன்ற உணவுகள் அனைத்திலும் கிளைசெமிக் குறியீட்டு அதிகமாக உள்ளன. இவை ஹார்மோனில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் மற்றும் இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தும். இதனால் முடி உதிர்தல் அதிகரிக்கும்.

57
டயட் சோடா :

டயட் சோடாக்களில் செயற்கை இனிப்புகள் உள்ளன. அது முடி உதிர்வை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகின்றனர். எனவே முடி உதிர்தலை குறைக்க டயட் சோடாக்களை குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

67
மதுபானம் ;

துத்தநாகம், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்றவை முடி வளர்ச்சிக்கு ரொம்பவே முக்கியமானது. அவற்றில் குறைபாடு ஏற்பட்டால் முடி உதிர்தல் ஏற்படும். எனவே நீங்கள் மதுபானம் குடித்தால் அது உடலில் ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வை உருவாக்கும்.

77
முடி உதிர்தலை குறைக்க சாப்பிட வேண்டியவை :

வால்நட், பாதாம், பிஸ்தா, தயிர், வெங்காயம், பச்சை காய்கறிகள், நெல்லிக்காய், கிவி, அன்னாசி, ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி வகைகள், பிளம், பால், வெல்லம், பருப்பு வகைகள், பயறு வகைகள், உலர் பழங்கள், கீரைகள் ஆகியவை ஆகும்.

Read more Photos on
click me!

Recommended Stories