பொதுவாக பெண்கள் அனைவரும் தங்கள் உதவு எப்போதுமே பிங்க் நிறத்தில் இருக்க வேண்டுமென்று தான் விரும்புவார்கள். உதடு பட்டு போல மென்மையாகவும், நல்ல நிறத்திலும் இருந்தால் முகத்தின் அழகை இன்னும் சிறப்பாக காட்டும். ஆனால் சிலரது உதடு மென்மையை இழந்தும், கருப்பாகவும், வறண்டு போயிருக்கும். இதற்கு காரணம் உதட்டில் இறந்த செல்கள் அதிகமாக தேங்கிருப்பதாகும். அதுமட்டுமல்லாமல் உதடுகளுக்கு போதுமான பராமரிப்பு இல்லை என்று அர்த்தம். இத்தகைய சூழ்நிலையில் உங்கள் உதட்டின் கருமையை நீக்கி உதட்டை அழகாக வைத்துக் கொள்ள உதவும் சில லிப் ஸ்க்ரப்களை குறித்து இங்கு பார்க்கலாம்.
26
சர்க்கரை மற்றும் தேன் ;
இந்த லிப் ஸ்க்ரப் தயாரிப்பதற்கு ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் சர்க்கரையில் 1 ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து அதை உதட்டில் தடவி சுமார் 2 நிமிடம் ஸ்க்ரப் செய்து சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு சூடான நீரில் கழுவ வேண்டும்.
36
பாதாம் எண்ணெய் மற்றும் சர்க்கரை :
1 ஸ்பூன் சர்க்கரை, 1 ஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் தேன் கலந்து அதை முகத்தில் தடவி 2 நிமிடங்கள் ஸ்கிரிப் செய்ய வேண்டும். பிறகு சூடான நீரில் கழுவவும். பிறகு லிப் பாம் தடவவும்.
ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் நாட்டு சர்க்கரையில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து அதை உதட்டில் தடவி 2 நிமிடங்கள் நன்கு ஸ்க்ரப் செய்ய வேண்டும். பிறகு லிப் பாம் உதட்டில் தடவவும்.
56
சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு :
இந்த ஸ்க்ரப் தயாரிப்பதற்கு ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து அதை உதட்டில் தடவி 2 நிமிடம் ஸ்கரப் செய்து பிறகு சூடான நீரில் உதட்டை கழுவும்.
66
தேங்காய் எண்ணெய் மற்றும் காபி தூள் :
இந்த லிப்ஸ் ஸ்க்ரப் தயாரிப்பதற்கு 1 ஸ்பூன் காபித்தூளில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து அதை உதட்டில் தடவி 2 நிமிடம் ஸ்கிரப் செய்து பிறகு சூடான நீரில் உதட்டை கழுவவும். அதன் பின் லிப் பாம் தடவவும்.
மேலே சொல்லப்பட்டுள்ள லிப் ஸ்க்ரப்பை வரத்திற்கு 2 முறைக்கும் மேல் ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். அதுபோல உதட்டுக்கு ஸ்க்ரப் பயன்படுத்திய பிறகு கண்டிப்பாக தடவவும்.