முடி அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் வளர நாம் தொடர்ந்து தலைமுடிக்கு எண்ணெய் தேய்கிறோம். ஆனால் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தடவ வேண்டும்? தினமும் தடவுவது நல்லதா? அல்லது வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை போதுமா? இது குறித்து நிபுணர்கள் சொல்லும் சில ஆலோசனைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
26
தலைமுடிக்கு எத்தனை முறை எண்ணெய் தேய்க்கலாம்?
நிபுணர்களின்படி, வாரத்திற்கு 1-2 முறை எண்ணெய் தடவுவது நல்லது. சாதாரண அல்லது வறண்ட முடி உள்ளவர்கள் வாரத்திற்கு இருமுறை தடவலாம். எண்ணெய் பசை உச்சந்தலை உள்ளவர்கள் வாரத்திற்கு ஒருமுறை தடவினால் போதும். இது உச்சந்தலையின் இயற்கையான எண்ணெய் உற்பத்தியை பாதிக்காது.
36
தினமும் தலைமுடிக்கு எண்ணெய் தேய்க்கலாமா?
தினமும் எண்ணெய் தடவினால் முடி நன்றாக வளரும் என பலர் நினைக்கிறார்கள். ஆனால், இது மயிர்க்கால்களை பலவீனமாக்கும். மேலும், தூசி மற்றும் அழுக்கு சேர்ந்து துளைகளை அடைத்து, பொடுகு, அரிப்பு, முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
லேசான சூட்டில் தலை முடிக்கு எண்ணெய் தடவுவதன் நன்மைகள்:
எண்ணெய் முடிக்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. மென்மையாக மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். வெதுவெதுப்பான எண்ணெயைப் பயன்படுத்தலாம், ஆனால் அதிக சூடு கூடாது. முடியை வலுவாகத் தேய்ப்பதும் ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
56
தலைமுடியில் எண்ணெய் நீண்ட நேரம் இருந்தால் என்ன ஆகும்?
எண்ணெய் தடவிய பின் 45 நிமிடம் முதல் 2 மணி நேரம் வரை வைத்திருந்தால் போதும். அதிக நேரம் வைத்தால் நன்மைகளை விட தீமைகளே அதிகம். பூஞ்சை தொற்று, பொடுகு, முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
66
தலை முடிக்கு எந்த எண்ணெய் சிறந்தது?
முடியின் வகைக்கு ஏற்ப எண்ணெயைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வறண்ட முடிக்கு தேங்காய் எண்ணெய் நல்லது. இது முடிக்குள் ஆழமாக ஊடுருவும். அடர்த்தியான முடிக்கு பாதாம் எண்ணெய், முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.