Men’s Skincare : சோப்பு vs பேஸ்வாஷ் : ஆண்கள் சருமத்திற்கு எது பெஸ்ட்?

Published : Jul 15, 2025, 02:57 PM IST

ஆண்களின் சருமத்திற்கு ஃபேஸ்வாஷ் அல்லது சோப்பு இவை இரண்டில் எது சிறந்தது என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
14
Face Wash vs Soap for Men

தற்போது ஆண்களும் பெண்களைப் போலவே சரும பராமரிப்பில் அதிகமாக மெனக்கிடுகிறார்கள். அவர்களும் தங்களுடைய சருமம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், சரும பராமரிப்பின் முதல் படி சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது தான். ஏனெனில் சருமத்தை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால் தூசி, அழுக்குகள் படிந்து பல சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில், நிறைய பெண்கள் ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவார்கள். பெரும்பாலான ஆண்கள் சருத்திற்கு சோப்பு தான் பயன்படுத்துவார்கள். இன்னும் சொல்லப் போனால் சோப்பை விட ஃபேஸ் வாஷ் அதிக விலை என்பதால் பல ஆண்கள் அதை வாங்குவதில்லை. சரி இப்போது ஆண்களின் முக சருமத்திற்கு பேஸ்வாஷ் அல்லது சோப்பு இவை இரண்டில் எது சிறந்தது என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
சருமத்திற்கு சோப்பின் பயன்:

முகம் மற்றும் உடலுக்கு சோப்பு பயன்படுத்தலாம். மேலும் அது முகத்திலுள்ள அழுக்களை நீக்கும். ஆனால் முகம் ரொம்பவே சென்சிடிவ் என்பதால் சோப்பில் இருக்கும் ரசாயனம் கலந்திருக்கும் ரசாயனங்கள் முக சருமத்திற்கு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும். குறிப்பாக முகத்திற்கு சோப்பு அதிகமாக பயன்படுத்தினால் முக சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெயை அகற்றி, சருமத்தில் அரிப்பு, எரிச்சல், வெடிப்பு, வறட்சி போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். எனவே இந்த பிரச்சனைகளை தவிர்க்க சோப்பிற்கு பதிலாக ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது நல்லது அல்லது சோப்பின் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள்.

34
முகத்திற்கு ஃபேஸ் வாஷ் நன்மைகள் :

நம்முடைய உடலின் மற்ற பாகங்களைத் தவிர முகம் ரொம்பவே சென்சிடிவாக இருக்கும். முகத்தில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் சருமம் சீக்கிரமாகவே சுருங்கிவிடும். அதுமட்டுமில்லாமல் அழுக்குகள், தூசிகள், சூரிய ஒளி கதிர் ஆகியவை முகத்தில் தான் நேரடியாக பாதிக்கும். மேலும் பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக வியர்ப்பதால் சருமத்தில் எண்ணெய் பசை அதிகரிக்கும். இந்த பிரச்சனைகளை தவிர்க்க பேஸ்வாஷ் தான் பெஸ்ட் சாய்ஸ்.

ஆனால் நீங்கள் ஃபேஸ் வாஷ் தேர்ந்தெடுக்கும் போது உங்களது சருமத்திற்கு ஏற்றபடி தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். சோப்பை விட ஃபேஸ் வாஷ் பயன்படுத்தும் போது சருமம் விரைவாக வயதான தோற்றத்தை அடையாது மேலும் பருக்கள் போன்ற சரும பிரச்சனைகள் சரியாகும். ஆனால் சோப்பை பயன்படுத்தினால் இந்த எல்லா நன்மைகளையும் நீங்கள் பெற முடியாது.

44
சருமத்திற்கு ஏற்ப ஃபேஸ் வாஷ் வகைகள் :

1. க்ளே ஃபேஸ் வாஷ் - உங்களுக்கு ஆயில் ஸ்கின்னாக இருந்தால் நீங்கள் க்ளே அடங்கி ஃபேஸ்வாஷ் பயன்படுத்துவது நல்லது. இந்த ஃபேஸ் வாஷ் முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணை பசை நீக்கி சருமத்திற்கு இயற்கையான பொலிவை வழங்கும்.

2. பிரைட்டனிங் ஃபேஸ் வாஷ் - உங்களது ஸ்கின் டல்லாக ஆரோக்கியமற்றதாக இருந்தால் இந்த ஃபேஸ் வாஷ் நல்ல தேர்வு இது சருமத்தில் உள்ள தூசிகள் அழுக்குகள் நீக்கி சருமத்தை ஆழமாக சுத்தம் செய்யும். அது மட்டுமல்லாமல் சருமத்திற்கு உடனடி பொலிவை தரும்.

3. ஆன்டி பிம்பிள் ஃபேஸ் வாஷ் - உங்களது முகத்தில் அதிக பொருட்கள் இருந்தால் நீங்கள் இந்த ஃபேஸ் வாஷை பயன்படுத்தலாம். இது முகத்தில் இருக்கும் பருக்களை குறைத்து சருமத்தை மென்மையாக்கும். இந்த ஃபேஸ் வாஷில் பாக்டீரியாக்களை அழிக்கும் பண்புகள் உள்ளதால் இது உங்களது சருமத்தை சுத்தமாக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories