முழங்கைகள், முழங்கால்கள் மட்டுமல்லாமல், நம்மில் பலருக்கும் அக்குளும் ரொம்பவே கருமையாக இருக்கும். இதனால் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிய முடியாமல் போகும். ஆனால் அக்குள் கருமையை போக்க விலையுயர்ந்த கிரீம்கள் மற்றும் சிகிச்சைகள் ஏதுமில்லாமல், நம் வீட்டு கிச்சனில் இருக்கும் சில பொருட்களை வைத்து ஒரேவாரத்தில் அக்குளில் இருக்கும் கருமையை சுலபமாக நீக்கிவிடலாம். அவை என்னென்ன? அவற்றை பயன்படுத்துவது எப்படி? என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
25
அக்குள் கருப்பாக மாறுவதற்கு காரணங்கள் :
- நம்முடைய உடலில் மெலனின் அதிகரிக்கும் போது உடலின் சில பகுதிகளில் கருமை. அவற்றில் அக்குள், கழுத்து, தொடை, இடுப்பு போன்றவை அடங்கும்.
- அக்குளில் இருக்கும் முடியை அகற்ற அதிக க்ரீம் பயன்படுத்தினால் அக்குள் கருப்பாக மாறும்.
- சில சமயங்களில் அக்குள் முடிய அகற்ற ரேசர் பயன்படுத்தினாலும் அக்குள் நிறம் கருமையாகும்.
35
அக்குள் கருமையை நீக்க உருளைக்கிழங்கு :
உருளைக்கிழங்கு எல்லார் வீட்டு சமையலறையில் இருக்கும் ஒரு முக்கியமான காய்கறியாகும். அக்குள் கருமையை நீக்க உருளைக்கிழங்கு சிறந்த தேர்வாகும். இது சருமத்தின் நிறத்தை சமன் செய்ய உதவும். இதற்கு ஒரு உருளைக்கிழங்கில் இருந்து சாற்றை எடுத்து அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து ஒரு பருத்தி உருண்டையுடன் அதை அங்குளில் தடவி சுமார் 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.
இதற்கு ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடி, 1 ஸ்பூன் பால் ஒரு மற்றும் 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து, அந்த பேஸ்டை அக்குளில் தடவி சுமார் 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தி வந்தால் அக்குள் கருமை விரைவில் மறைந்துவிடும்.
55
அக்குள் கருமையை நீக்க கடலை மாவு :
அக்குள் கருமையை நீக்க ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு எலுமிச்சை சாறு, தண்ணீர் மற்றும் பச்சரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து அதை அக்குளில் தடவி சுமார் 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு தண்ணீரால் கழுவ வேண்டும். இதை தினமும் செய்து வந்தால் ஒரே வாரத்தில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.