Summer Tips:கொளுத்தும் வெயிலிலும் உங்க முகத்தை பளபளன்னு,ஜொலிக்க வைக்க இந்த குளு குளு ஃபேஸ் பேக் போடுங்க

First Published | Apr 9, 2023, 8:17 AM IST

Beauty tips:வீட்டில் இருக்கும் 3 பொருள் வைத்து சருமத்தை குளிர்ச்சியாக வைத்து கொள்ள உதவும் கூல் ஃபேஸ் பேக்குகளை எப்படி செய்து பயன்படுத்துவது என்பதை இந்த பதிவில் காணலாம்
 

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வாட்டி எடுக்க ஆரம்பித்துளளது. இப்போது நம்மில் அனைவருக்கும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளை அதிகமாக ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

இந்த கொளுத்தும் கோடை வெப்பத்தில் இருந்து நமது சருமத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்தல் அவசியமாகிறது. அப்படி முகத்தை குளுகுளு என்று வைத்துக் கொள்ள வீட்டிலுள்ள சில பொருட்களை வைத்து கூல் ஃபேஸ் பேக் செய்து பயன்படுத்தினால் போதும்.

வீட்டில் இருக்கும் 3 பொருள் வைத்து சருமத்தை குளிர்ச்சியாக வைத்து கொள்ள உதவும் கூல் ஃபேஸ் பேக்குகளை எப்படி செய்து பயன்படுத்துவது என்பதை இந்த பதிவில் காணலாம்

கோடை வெயிலலில் சருமத்தில் பல்வேறு விதமான சரும பிரச்சனைகள் உண்டாகும். அதிக நேரம் வெயிலில் பிரயாணம் செய்யும் போது வெப்ப சொறி உண்டாகும்.தோலில் சின்னதாக , சிவப்பு நிறத்தில், அரிப்பு புடைப்புகளை உண்டாகும். அதோடு கோடையில் முகத்தில் பலருக்கும் எண்ணெய் உற்பத்தி ஆகி எண்ணெய் வழிய செய்யும்.

இது சருமத்தில் உள்ள துளைகளை அடைத்து விடுவதால் முகப்பரு மற்றும் வெடிப்புகளை ஏற்பட செய்யும். வெப்ப அலையினால் சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதா கதிர்கள் சருமத்தில் சுருக்கங்கள், புள்ளிகள் போன்றவற்றை தோற்றுவிக்கும்.

இதற்கு சருமத்தினை ஹைட்ரேட்துடன் வைப்பதும் , சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதாலும் வெப்பத் தடிப்புகள் ஏற்படுவதை தடுக்கலாம். இறுக்கமான உடைகளை அணியாமல் சற்று தளர்வான ஆடைகளை அணிவதன மூலம் சருமத்தில் வியர்வை மூலம் உண்டாகும் வேர்க்குரு போன்ற பிரச்னையை தடுக்கும்.

Tap to resize

வெள்ளரி மற்றும் அலோ வேரா ஃபேஸ் மாஸ்க் :

தேவையான பொருட்கள்:

வெள்ளரி -1/2
கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்

செய்முறை :

வெள்ளரிக்காயை சிறுசிறு துண்டாக வெட்டி, அரைத்துக்கொள்ளவும். அதோடு கற்றாழை ஜெல்லையும் கலந்து மென்மையான பேஸ்ட்டை உருவாக்க வேண்டும். அந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை விட்டு, பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்

உங்கள் சருமத்தை ஹைட்ரேட்டாக வைக்க வெள்ளரி சிறந்த சாய்ஸ் ஆகும். அலோ வேரா உங்கள் சருமத்தில் கூலிங் ஏஜென்ட்டாக செயல்புரிகிறது.

புதினா மற்றும் தயிர் மாஸ்க் :
தேவையான பொருட்கள்:

தயிர்- 1/2 கப்
புதினா இலைகள்- 1/4 கப்

செய்முறை :

புதினா இலைகளை அலசிய பின் மிக்சி ஜாரில் சேர்த்து அரித்துக் கொண்டு அதில் கெட்டி தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொண்டு அதனை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை உலர வைத்து பின் குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.

புதினா தோலினை குளிர்ச்சியாக வைக்க செய்கிறது.
மேலும் தயிரில் இருக்கும் லாக்டிக் ஆசிட் சருமத்தை தோலுரித்து பிரைட்டாக ஜொலிக்க செய்கிறது.

ரோஸ்வாட்டர் மற்றும் சந்தன ஃபேஸ் மாஸ்க்:

தேவையான பொருட்கள்

சந்தன தூள் - 1 ஸ்பூன்
ரோஸ் வாட்டர்- 1ஸ்பூன்

செய்முறை:

ஒரு சின்ன பௌலில் சந்தனத்தூள்போட்டு அதில் ரோஸ் வாட்டர் ஊற்றி மிக்ஸ் செய்து பின் அதனை முகத்தில் அப்பளை செய்து 15 நிமிடங்கள் வரை உலர விட்டு பின் முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும். சந்தனம் சருமத்தை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. ரோஸ்வாட்டரானது சருமத்தை ஹைட்ரேட்டாக வைக்க செய்கிறது.

வெள்ளரி மற்றும் தயிர் மாஸ்க்

தேவையான பொருட்கள்:

வெள்ளரி - 1/2
கெட்டி தயிர்- 1/4 கப்

செய்வது எப்படி:

வெள்ளரியை சின்ன பீஸ்களாக வெட்டி அதனை சேர்த்து அரைத்து எடுத்து அதில் கெட்டி தயிர் சேர்த்து பேஸ்ட் செய்துக்க கொள்ள வேண்டும். இதனை ஒரு ப்ரஷ் வைத்து முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் வரை சற்று உலர்ந்த பின் முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும்.

வெள்ளரிக்காய் உங்கள் சருமத்தை குளிர்விக்கும் ஏஜென்ட்டாக செயல்படும் . தயிரானது சருமத்தை ஹைட்ரேட் செய்ய பயன்படுகிறது.

வடக்கு திசையில் வீடு கட்டி இருக்கீங்களா?அப்ப எல்லா ரூமும் சரியான இடத்தில கட்டி இருக்காங்களா செக் பண்ணிக்கங்க

Latest Videos

click me!