குளிர்காலத்தில் முடி அதிகமாக உதிர்கிறது என்றால், சில வகை எண்ணெய்களை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால் இனி முடி உதிராது. முடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
குளிர்காலத்தில் சருமம் வறண்டு, முடி அதிகம் உதிரும். சூடான நீரில் குளிப்பதால் உச்சந்தலை வறண்டு முடி உதிர்வு அதிகரிக்கும். இதைத் தடுக்க சில எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். அவை என்னவென்று பார்ப்போம்.
24
தேங்காய் எண்ணெய்...
தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடாக்கி வேர்க்கால்களில் மசாஜ் செய்தால் முடி உதிர்வது குறையும். முடியும் வேகமாக வளர ஆரம்பிக்கும்.
விளக்கெண்ணெய்:
இது முடியின் வேர்களை வலுவாக்கி, வேகமாக வளர உதவும். இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.
34
பாதாம் எண்ணெய்...
பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ, மெக்னீசியம் நிறைந்துள்ளது. இதை வேர்கள் முதல் நுனி வரை தடவினால், முடி வறண்டு போகாமல் பளபளப்பாக இருக்கும். இது முடிக்கு நல்ல ஊட்டமளிக்கும்.