உங்களுக்கு முகப்பரு அதிகமாக வருகிறதா? இதற்கு முடிவு கட்ட பலவிதமான ஸ்கிரீன் கால் மற்றும் பல முயற்சிகளை செய்தோம் முகப்பரு குறைந்தபாடில்லையா? இதற்கு மாற்று வழி ஏதேனும் தெரிகிறீர்களா? அப்படியான்றால் உங்கள் வீட்டில் இருக்கும் அதுவும் கிச்சனில் உள்ள சில ஒரு பொருட்களில் மருத்துவ குணம் உள்ளன. அவற்றை ஃபேஸ் பேக்காக போட்டால் போது முகப்பரு இனி வரவே வராது. முகமும் எப்போதுமே பிரகாசமாக இருக்கும். அவை என்னென்ன? அவற்றை பயன்படுத்தும் முறை குறித்து இங்கு பார்க்கலாம்.
26
கற்றாழை மற்றும் கிரீன் டீ ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு கிரீன் டீயை சேர்த்து நன்கு கலந்து அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இரவு தூங்கும் முன் இந்த ஃபேஸ் பேக் போடவும். இந்த ஃபேஸ் பேக் முகப்பரு வருவதை குறைக்கும், சருமத்தையும் மென்மையாக மாற்றும்.
36
தேன் மற்றும் பப்பாளி ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க ஒரு கிண்ணத்தில் நன்கு பழுத்த பப்பாளி பழத்தை எடுத்து அதை மசித்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து முக மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விடவும். பிறகு சூடான நீரில் முகத்தை கழுவவும். அதன் பிறகு மாய்ஸ்சரைசர் அப்ளை செய்யவும்.
இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு கிண்ணத்தில் நன்கு பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதனுடன் மஞ்சள் மற்றும் சிறிதளவு ரோஸ் வாட்டர் அல்லது தேன் கலந்து பேஸ்ட் போலக்கி அதை உங்களது முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு சூடான நீரால் முகத்தை கழுவ வேண்டும். இறுதியாக மாய்ஸ்ரைசர் பயன்படுத்த மறக்காதீர்கள்.
56
முல்தானி மட்டி மற்றும் வேப்பிலை ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க ஒரு கிண்ணத்தில் வேப்பிலை பொடி மற்றும் முல்தானி மட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் கொஞ்சமாக ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போலாக்கி அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இறுதியாக மாய்ஸ்சரைசர் பயன்படுத்தவும்.
66
தேன் மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க 2 ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், 1 ஸ்பூன் தேன் கலந்து அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து சூடான நீரால் முகத்தை கழுவவும். வேண்டுமானால் இதனுடன் கிரீன் டீ அல்லது வெதுவெதுப்பான நீர் சேர்த்துக் கொள்ளலாம்.