முல்தானி மட்டியை யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது? அப்படி பயன்படுத்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் ஏற்படும் என்ன என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முல்தானி மட்டி சரும பராமரிப்பில் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் ஆகும். இதில் சருமத்திற்கு தேவையான தாதுக்கள், சிலிகேட்டுகள் அதிக அளவில் உள்ளன. மேலும் இது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கவும், சருமத்தை பளபளப்பாக வைக்கவும் உதவுகிறது. இது தவிர சண்டேனை குறைக்க, சருமத்தின் நிறத்தை மேம்படுத்த முல்தானிமட்டி முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படி சரும பராமரிப்பில் முல்தானி மெட்டி பல நன்மைகளை வழங்கினாலும் சில இதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் பக்க விளைவுகள் ஏற்படும். இந்த பதிவில் யாரெல்லாம் முல்தானி மட்டி பயன்படுத்தக்கூடாது? அப்படி பயன்படுத்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
27
பருக்கள் மற்றும் காயங்கள் உள்ளவர்கள்
உங்களது முகத்தில் பருக்கள் மற்றும் பருக்களால் காயங்கள் ஏதேனும் இருந்தால் நீங்கள் முல்தானி மட்டியை ஒருபோதும் பயன்படுத்தவே கூடாது. அப்படி பயன்படுத்தினால் காயத்தில் இருக்கும் இரத்தத்தோடு அது கலந்து சருமத்திற்குள் சென்று மோசமான சரும பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.
37
உணர்திறன் சருமம் உள்ளவர்கள்
உள்ளவர்கள் முல்தானி மெட்டியை பயன்படுத்தக் கூடாது. இல்லையெனில், குறைவாக பயன்படுத்தலாம். ஒருவேளை அதிகமாக பயன்படுத்தினால் அது சருமத்தில் எரிச்சல், காயங்கள், தடிப்புகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் சருமத்தை மந்தமாக்கி விடும்.
வறண்ட சருமம் உள்ளவர்கள் முல்தானிமட்டி முற்றுலும் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் ஈரத்தை உறிஞ்சி விடும். இதனால் சருமம் இன்னும் வறட்சியாகிவிடும்.
57
சளி மட்டும் இருமல் பிரச்சனை உள்ளவர்கள்
உங்களுக்கு சளி, இருமல், ஆஸ்துமா இருந்தால் நீங்கள் முல்தானி மட்டியை முற்றிலும் தவிர்க்கவும் இல்லையெனில் இது நிலைமையை மேலும் மோசமாகிவிடும்.
67
அலர்ஜி உள்ளவர்கள்
சிலருக்கு முல்தானி மட்டி பயன்படுத்தினால் சருமத்தில் எரிச்சல் அலர்ஜியை ஏற்படுத்தி விடும். முல்தானி மட்டி பயன்படுத்திய பிறகு சருமத்தில் அரிப்பு, எரிச்சல் உணர்வு, சிவந்து போதல், கண்களில் வீக்கம் அல்லது கண்ணீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் நீங்கள் சந்தித்தால் முல்தானி மட்டியை இனி பயன்படுத்தாதீர்கள்.
77
முக்கிய குறிப்பு
முகத்திற்கு அடிக்கடி முல்தானி மட்டியை பயன்படுத்துவதை தவிர்க்கவும். இல்லையெனில் அது சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை உறிஞ்சி, சருமத்தை வறட்சியாக்கி விடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.