திருமணங்கள், விழாக்கள், பண்டிகைகள் வந்தாலே பெண்கள் தங்களது கைகளில் மெஹந்தி போட்டு அழகுபடுத்திக் கொள்வார்கள். இதனால் தானாகவே விசேஷங்களுக்குரிய கலையும் வந்துவிடும். இப்படி கைகளில் மெஹந்தி போட்டுக் கொள்வது கொண்டாட்டங்களுக்கு அழகு சேர்க்கும் ஒரு பாரம்பரியமாக தற்போது மாறிவிட்டது. ஆனால் பண்டிகைகள் எல்லாம் முடிந்த பிறகு கையில் போட்ட மெஹந்தியை நீக்க நினைப்பார்கள். காரணம் அது சில நாட்களிலே மங்க ஆரம்பிக்கும். இதனால் கையின் அழகு கெடுக்கும். ஆகவே தான் அதை உடனே அழிக்க வேண்டுமென விரும்புவார்கள். இப்படியிருக்க, கையில் போட்ட மெஹந்தியை கஷ்டமில்லாமல் மிகவும் சுலபமாக அகற்ற உதவும் சில எளிய வீட்டு தீர்வுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
26
பேக்கிங் சோடா
ஆடையில் படிந்த கறைகள் மட்டுமல்ல, கைகளில் இருக்கும் மெஹந்தியையும் அகற்ற பேக்கிங் சோடா உதவுகிறது. இதற்கு கைகளை தண்ணீரில் கழுவவும். பின் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை கையில் தடவி ஸ்கிரப் செய்யுங்கள். 10 நிமிடங்கள் கழித்து கைகளை கழுவி பிறகு மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள். இது கைகளை வறண்டு போகாமல் தடுக்க உதவும்.
36
தக்காளி சாறு
தக்காளி சாறு சூரிய ஒளியால் சருமத்தில் படிந்த டேனை நீக்குவது மட்டுமல்லாமல், மெஹந்தி கறையையும் போக்க உதவுகிறது. இதற்கு கையில் தக்காளி சாச்சை தடவி அரை மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவினால் போதும்.
தேங்காய் எண்ணெய் சருமத்தை பிரகாசமாக்கும். சர்க்கரை இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்படும். எனவே இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து மெஹந்தியை அகற்ற பயன்படுத்தலாம். இதற்கு ஒரு கிணத்தில் இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து அதை கையில் தடவி சர்க்கரை கரையும் வரை ஸ்கிரப் செய்து செய்ய வேண்டும். பிறகு கைகளை கழுவும்.
56
எலுமிச்சை சாறு
எலுமிச்சையில் இருக்கும் பண்புகள் கையில் இருக்கும் மெஹந்தி கறையை அகற்ற உதவுகிறது. இதற்கு கையில் எலுமிச்சை சாற்றை தடவி 15 நிமிடங்கள் கழித்து கையை கழுவ வேண்டும். வேண்டுமானால் எலுமிச்சை சாறுடன் பேக்கிங் சோடாவை சேர்த்துக் கொள்ளலாம். பேக்கிங் சோடாவை சேர்த்தால் கைகளை சூடான நீரில் தான் கழுவ வேண்டும். பிறகு மாய்ஸ்சரைசர் பயன்படுத்த மறக்காதீர்கள்.
66
உப்பு நீர்
உப்பு சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்படுகிறது. எனவே இது மெஹந்தி கறையையும் அகற்றும். இதற்கு ஒரு வழியில் சூடான நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 5 ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து உங்களது கைகளை 20 நிமிடங்கள் அதில் வைத்து பிறகு துடைக்கவும். இப்போது நல்ல மாற்றத்தை நீங்கள் காண்பீர்கள். கைகளை ஈரப்பதமாக வைக்க மாய்ஸ்ரைசர் அல்லது எண்ணெய் பயன்படுத்தவும்.