அந்த இடத்தில் புது டாட்டூ குத்தி... ஹீரோயின்களை மிஞ்சும் அளவுக்கு செம கிளாமராக போட்டோஷூட் நடத்திய விஜே அஞ்சனா

First Published Jan 21, 2024, 4:27 PM IST

கோலிவுட்டில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்துகொண்டிருக்கும் விஜே அஞ்சனாவின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக பணியாற்றியபோதே இளசுகள் மனதை தன்னுடைய அழகால் கொள்ளையடித்தவர் அஞ்சனா ரங்கன். இதையடுத்து ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களையும் தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார் அஞ்சனா ரங்கன்.

இவர் கடந்த 2016-ம் ஆண்டு சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அஞ்சனாவின் கணவர் சந்திரன், பிரபுசாலமன் இயக்கிய கயல் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் ஆவார். அப்படத்திற்கு பின்னர் அவர் வெங்கட் பிரபு இயக்கிய பார்ட்டி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார்.

அப்படம் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார் சந்திரன். மறுபுறம் அஞ்சனா தொகுப்பாளினியாக செம்ம பிசியாக உள்ளார். 

இதையும் படியுங்கள்... கேள்வி கேட்ட விஜே... கையை தட்டிவிட்டு சென்ற அல்லுஅர்ஜுன் - சர்ச்சை குறித்து அஞ்சனா விளக்கம்!

கோலிவுட்டில் பல்வேறு முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழா, புரமோஷன் விழா, சக்சஸ் மீட், டிரைலர் ரிலீஸ் விழா போன்றவற்றை தொகுத்து வழங்கி அதன்மூலம் லட்ச லட்சமாக சம்பாதித்து வருகிறார்.

விஜே அஞ்சனாவுக்கு ஒரு மகனும் உள்ளார். குழந்தை பிறந்த பின்னர் மாடலிங்கிலும் ஆர்வம் காட்டி வரும் அஞ்சனா அவ்வப்போது கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தன் சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

அண்மையில் கழுத்தில் புதிதாக டாட்டூ ஒன்றை குத்திக்கொண்ட அஞ்சனா, தற்போது சட்டை பட்டனை கழட்டிவிட்டு, குட்டை டவுசரில் தொடையழகை காட்டியபடி படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ளார்.

ஹீரோயின்களை மிஞ்சும் அளவுக்கு அஞ்சனா நடத்தி இருக்கும் இந்த கவர்ச்சி போட்டோஷூட் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், ஒருவேளை சினிமாவில் நடிப்பதற்காக இப்படி கவர்ச்சி காட்டுகிறாரோ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... குஷி ஜோதிகாவையே மிஞ்சும் அளவுக்கு... சேலையில் வளைத்து வளைத்து இடுப்பை காட்டி ரச்சிதா நடத்திய போட்டோஷூட்

click me!