Vikram: வசூலில் 100 கோடி கடந்த ' விக்ரம்' படம்...2 நாள் முடிவில் பிளாக் பஸ்டர் ஹிட்? படு குஷியில் ரசிகர்கள்...

First Published Jun 5, 2022, 10:38 AM IST

Vikram box office collection: தமிழக ரசிகர்களுக்கு நீண்ட வருடம், காத்திருப்பிற்கு செம்ம விருந்தாக விக்ரம் படம் அமைந்துள்ளது. இதனால், அதன் வசூலும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதன்படி, விக்ரம் இரண்டு நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்து பிரமாண்ட சாதனை செய்துள்ளது.

Kamal Haasan Vikram

நான்கு வருட காத்திருப்பிற்கு பிறகு கமல் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் நேற்று முன்தினம், உலகமெங்கும் பான் இந்தியா படமாக பிரமாண்டமாக ரிலீசானது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து, விஜய்சேதுபதி, பக்த் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, ஆண்டனி வர்கீஸ், சிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகிய மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.   

Kamal Haasan Vikram

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும்,  இப்படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.உலகமெங்கும் 5 அயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்கிலும், தமிழகத்தில் மட்டும் 800க்கும் அதிகமான தியேட்டர்களில் படம் ரிலீசாகி செம்ம வரவேற்பை பெற்று வருகிறது. 

Kamal Haasan Vikram

கமல், சூர்யா, விஜய்சேதுபதி நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்படி திரைப்படமும் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் செம மாஸாக இருக்க, ரசிகர்களை படத்தை திரையரங்கில் கொண்டாடி வருகின்றனர். 

Kamal Haasan Vikram

இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறது. அதன்படி இப்படம் ரிலீசான முதல் நாளில், தமிழகத்தில் மட்டும் 20 கோடிக்கு மேல் வசூலும், உலகம் முழுவதும் 45 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாம். மேலும், விக்ரம் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து, வெளிவந்த வண்ணம் உள்ளது. 

Kamal Haasan Vikram

இந்த நிலையில், படத்தின் இரண்டாம் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம்  இரண்டாம் நாள் தமிழகத்தில் 25 கோடிக்கு மேல் வசூலும்,  உலகம் முழுவதும் ரூ 45 கோடிக்கு  மேல் வசூல் செய்துள்ளதாம். அதன்படி, விக்ரம் இரண்டு நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்து பிரமாண்ட சாதனை செய்துள்ளது.  .அதுவும் இரண்டாவது நாள் வசூலில் இதுவரை வந்த படங்களின் இரண்டாவது நாள் வசூலை விட விக்ரம் தான் அதிகமாம். தற்போது, கமலின் கெரியரில் இந்த படம்  மிக பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமைத்துள்ளது. வரும் நாட்கள் இந்த விக்ரம் படம் kGF, RRR  உள்ளிட்ட படங்களின் வசூல் லிஸ்டில் இணையும் என்று திரையுல வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

மேலும் படிக்க....Priyanka Mohan: குறுகிய காலகட்டத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன்...படு குஷியில் உள்ளாராம்..

click me!