அழகில் நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் அனிதா விஜயகுமார்.. அருண் விஜய் அக்காவுக்கு வயசே ஆகாதா..

First Published Apr 15, 2024, 10:56 PM IST

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான குடும்பங்களில் ஒன்று நடிகர் விஜயகுமார் குடும்பம். விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமார் அனைவருக்கும் தெரிந்த பிரபலம் ஆவார்.

Anitha Vijayakumar

நடிகர் விஜயகுமாரின் குடும்பம் மிகவும் பிரபலமானது என்பது அனைவரும் அறிந்ததே. அவருடைய இரண்டு மனைவிகளுக்கும் தலா மூன்று குழந்தைகள். கவிதா, அனிதா, அருண் விஜய் ஆகியோர் மூத்த மனைவி முத்துக்கண்ணுக்கு பிறந்தவர்கள். இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, பிரீதா, ஸ்ரீதேவி என மூன்று மகள்கள் உள்ளனர்.

Vijayakumar

அனிதாவைத் தவிர விஜயகுமாரின் வாரிசுகள் அனைவரும் படங்களில் நடித்துள்ளனர். அனிதாவுக்கு சினிமாவில் ஆர்வம் இல்லாததால் மருத்துவம் படித்துவிட்டு டாக்டராக பணியாற்றி வருகிறார். அனிதா விஜயகுமாருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் தியாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.

Actor Vijayakumar

அனிதா விஜயகுமார் தனது மகளின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி முடித்துள்ளார். தியாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. நடிகை நயன்தாரா திருமணம் நடைபெற்ற மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தியாவின் திருமணமும் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

Shankar Daughter marriage

திருமணம் முடிந்து விட்டாலும் திருமண கொண்டாட்டங்கள் இன்னும் ஓயவில்லை. அனிதா விஜயகுமார் சமீபத்தில் தனது மகளின் திருமணத்திற்காக உழைத்த உறவினர்களுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ராஜ விருந்து அளித்தார்.

Nayanthara

இந்த நிலையில் இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் இன்று நடைபெற்றது. அதில் தந்தை விஜயகுமார், மகள்கள் அனிதா விஜயகுமார், பிரீதா, ஸ்ரீதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Mileage Bike: மைலேஜ் 70 கிமீ.. விலையோ ரூ.60 ஆயிரம் தான்.. நல்ல மைலேஜ் பைக்கை உடனே வாங்குங்க..

click me!