Vijay: மனைவி சங்கீதா ஆசையை நிறைவேற்ற... தளபதி இப்படியெல்லாம் கூட செஞ்சிருக்காரா? வெளியான ஆச்சர்ய தகவல்!

First Published Oct 16, 2023, 1:08 PM IST

தளபதி விஜய் தன்னுடைய மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக பிரபல இயக்குனர் ஒருவரை அழைத்து, கதை கேட்டு நடித்ததாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
 

Thalapathy Vijay Fans

தென்னிந்திய திரையுலகில், தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் தளபதி விஜய். இவர் நடிக்கும் படங்களின் கதையை... ஆரம்ப காலத்தில் இவரின் தந்தையுடன் கேட்டு வந்தாலும், பல வருடமாக அவரே தான், முடிவு செய்கிறார். 
 

Vijay Fulfil Wife Wishes:

ஆனால் முதல் முறையாக தன்னுடைய மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, ஒரு இயக்குனரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து, பாராட்டியதுடன் மட்டும் இன்றி, அந்த இயக்குனரின் இயக்கத்தில் சூப்பர் ஹிட் படம் ஒன்றிலும், நடித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

Kajal Aggarwal: கால் முளைத்த பூவே! கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் காஜல் அகர்வால் நடத்திய ஹாட் போட்டோ ஷூட்
 

AL Vijay

விஜய்யின் மனைவி, சங்கீதாவுக்கு இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2011-ஆம் ஆண்டு வெளியான, 'தெய்வத்திருமகள்' படம் என்றால் மிகவும் பிடிக்குமாம். எனவே ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தளபதி ஒரே ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்கிற தன்னுடைய விருப்பத்தை அவரிடம் கூறியுள்ளார். தன்னுடைய மனைவியின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்த விஜய், ஏ.எல்.விஜய்யை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து... கதை ஏதாவது வச்சிருக்கீங்களா? என கேட்டுள்ளார்.

Thalaiva Movie:

இதனை சற்றும் எதிர்பார்த்திடாத ஏ.எல்.விஜய், தலைவா படம் அரசியல் கதைக்களம் கொண்டது என்பதால் ஒரு வித தயக்கத்துடனே கூறியதாகவும், ஆனால் விஜய்க்கு கதை பிடித்து விட்டதால்... படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இப்படி தான் 'தலைவா' படம் உருவாகியதாம். எனவே 'தலைவா' படம் உருவாவதற்கு முக்கிய காரணம் விஜய்யின் மனைவி என்றே கூறலாம். சங்கீதா ஆசைப்பட்டது போல் விஜய், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடித்தது மட்டும் இன்றி, இப்படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

கேரள புடவையில்... உச்சம் தொடும் கவர்ச்சி! தண்ணீருக்குள் ஜலக்கிரீடை செய்யும் காந்த கண் அழகி பிரியா வாரியர்!

Thalapathy Give Surprise:

இந்த படத்தின் மூலம் ஏ.எல்.விஜய் - அமலா பால் இடையே இருந்த காதலும் கைக்கூடி திருமணத்தில் முடிந்தது. மேலும் விஜய் இந்த திருமணத்தில் கலந்து கொண்டது மட்டும் இன்றி, ஏ.எல்.விஜய் மற்றும் அமலா பாலை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து, மிகப்பெரிய விருந்தே வைத்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிட தக்கது. மனைவியின் ஆசைக்காக விஜய் இப்படியெல்லாம் செய்துள்ளாரா? என ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் இந்த தகவலை படித்து வருகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!