Today Gold Rate in Chennai : மக்களே தங்கம் வாங்க இதுதான் நல்ல சான்ஸ்! விட்டா திரும்ப கிடைக்காது! முந்துங்கள்!

First Published Jan 5, 2024, 10:27 AM IST

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

Gold rate

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.

yesterday Gold Rate

நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.360  குறைந்து ரூ.46,960-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5,870-க்கு விற்பனையானது.

Gold Rate in Tamilnadu
 

Latest Videos


Today Gold Rate

இன்றைய (ஜனவரி 05) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,880-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து  ரூ.5,860ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,330ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.50,640-ஆக விற்பனையாகிறது. 

இதையும் படிங்க;- அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 17 மாவட்டங்களில் அடிச்சு ஊத்துப்போகுதாம் மழை.. சென்னை வானிலை மையம் அலர்ட்..!

Today Silver Rate

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. கிராம் வெள்ளி ரூ.78.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

click me!