Chanakya Niti : இந்த அறிகுறிகள் வீட்டில் இருக்கா..? உங்களுக்கு கெட்ட காலம் ஆரம்பம்.. ஜாக்கிரதை!

First Published May 4, 2024, 3:58 PM IST


சாணக்ய நீதி படி, உங்கள் வீட்டில் இந்த அறிகுறிகள் தென்பட்டால், உங்களுக்கு கெட்ட காலம் தொடங்கப் போகிறது என்று அர்த்தம். 

சாணக்ய நீதியில் ஒரு மனிதன் கெட்ட காலம் தொடங்கும் போது அதை எப்படி முன்கூட்டியே உணர்ந்து கொள்வது என்று சொல்லப்பட்டு இருக்கிறது. இதற்கு வீட்டில் அல்லது அதைச் சுற்றி  நடக்கும் சில நிகழ்வுகளை கவனித்தால், கெட்ட காலம் தான் வரும் என்று அர்த்தம். சரி வாங்க இப்போது வீட்டில் நிதி நெருக்கடியின் அறிகுறிகள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

துளசி செடி: துளசி செடி இந்து மதத்தில் புனிதமாக கருதப்படுகிறது. பொதுவாகவே இது எல்லோருடைய வீடுகளிலும் இருக்கும். ஆனால் உங்கள் வீட்டில் உள்ள துளசி செடியும் உங்களுக்கு கெட்ட காலம் தொடங்கும் என்பதை உணர்த்துவதாக சாணக்யா கூறினார். எப்படியெனில், உங்கள் வீட்டில் இருக்கும் துளசி செடி காய்ந்து போனால், நீங்கள் பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று அர்த்தம். எனவே, துளசி செடியை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்.

குடும்பத்தில் சண்டை: சாணக்யர் நீதி படி, தினமும் உங்கள் வீட்டில் சண்டை நடந்து கொண்டிருந்தால் அத்தகைய சூழ்நிலைகளில் லட்சுமி தேவி உங்கள் வீட்டில் தங்க மாட்டாள். இதன் காரணமாக உங்கள் நிதி நிலைமை மோசமாகப் பாதிக்கப்படும். எனவே, முடிந்தவரை நல்லிணக்கத்துடன் இருக்க முயற்சி செய்யுங்கள்.

கண்ணாடி உடைதல்: சாணக்யாவின் கூற்றுப்படி, எந்த ஒரு கண்ணாடிப் பொருளும் மீண்டும் மீண்டும் உடைந்தால் அந்த குடும்பத்தில் நிதி நிலைமை மோசமாகும் என்று அர்த்தம். பொதுவாகவே கண்ணாடி உடுவது கெட்ட சகுனத்தை குறிக்கும். 

இதையும் படிங்க:  Chanakya Niti : 'இந்த' நபர்களிடம் உங்கள் சோகத்தை ஒருபோதும் சொல்லாதீங்க.. ஜாக்கிரதை! - ஆச்சார்ய சாணக்கியர்

பூஜை இல்லாத வீடு: சாணக்யாவின் கூற்றுப்படி, வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்காக தினமும் பூஜை செய்வது மிகவும் அவசியம். மேலும் இப்படி தினமும் வீட்டில் பூஜை செய்தால், லட்சுமிதேவி உங்கள் வீட்டிற்கு வந்து அருள் புரிவாள். பூஜை இல்லாத வீட்டில் லட்சுமி தேவி தங்குவதில்லை. எனவே, இந்த விஷயங்களை மனதில் வைத்து பூஜை செய்யுங்கள்.

இதையும் படிங்க: எந்த சூழ்நிலையிலும் இந்த 3 விஷயங்களை மறக்காதீங்க..! சாணக்கிய நீதி சொல்வது என்ன..?

பெரியவர்களை அவமதிப்பது: சாணக்யாவின் கூற்றுப்படி, பெரியவர்களை அவமரியாதை செய்யும் வீட்டில் லட்சுமி தேவி வசிப்பதில்லை. மேலும் அந்த வீட்டில் மகிழ்ச்சி இருக்காது. அதனால்தான் சாணக்கியர், எப்போதும் வீட்டில் இருக்கும் பெரியவர்களை மதிக்க வேண்டும் என்கிறார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!