
தளபதி விஜய் தன்னுடைய சிறு வயதில் இருந்தே ஒரு கார் பிரியர். குழந்தையாக இருக்கும் போது... எப்படி பொம்மை கார்களாக வாங்கி அடிக்கினாரோ, அதே போல், சம்பாதிக்க துவங்கிய பின்னர் ரகம் ரகமாக தனக்கு பிடித்த கார்களை வாங்கத் துவங்கினார். இவரிடம் தற்போது, வின்டேஜ், பிஎம்டபுள்யூ, மினிகூப்பர், டொயோட்டா இன்னோவா, ஆடி ஏ8 உள்ளிட்ட டாப் மாடல் கார்கள் உள்ளதாம் சரி அவரின் கார் கலெக்ஷன் பார்க்கலாம் வாங்க.
தளபதி விஜய் சம்பாதிக்க துவங்கிய பின்னர், அதாவது 90 க்குப்பின் விஜய் பிரியப்பட்டு வாங்கிய கார் டாடா எஸ்டேட் (Tata Estate). அப்போதே இதன் விலை ரூ.2.52 லட்சம். இந்தக் காரில் தான் தளபதி ஆரம்பத்தில் உற்சாகமாக தன்னுடைய நண்பர்களுடன் சென்னையை வலம் வந்தார். முதல் காரச்சே இருக்காதா பின்ன!!
Ramarajan: குடிகளுக்கு ஏன் குடி? விஷச்சாராய மரணத்தால் கொதித்தெழுந்த ராமராஜனின் வேதனை அறிக்கை!
இதைத் தொடர்ந்து, தளபதி விஜய் ஆசைப் பட்டு வாங்கிய கார்களில் பழைய மாடல் கார் பிரீமியர் 118 என்.ஈ. (Premier 118 NE). இந்த மாடல் வந்த சில வாரங்களேயே இந்த காரை வாங்கினாராம் இதன் மதிப்பு அப்போது ரூ.6 லட்சம்.
தன்னுடைய வாழ்க்கை தரம் உயர... உயர தளபதி விஜய் வாங்கிய கார்களின் ரேட்டும் அதிகாரித்து கொண்டே சென்றது. அந்த வகையில் விஜய் மிகவும் விருப்பட்டு வாங்கிய கார்களில் ஒன்று டொயோட்டா செரா (Toyota Sera) கார் 1990 களில் பிரபலமாக இருந்தது. இதன் விலை ரூ.15 லட்சம் இருக்குமாம்.
இதை தெடர்ந்து, தளபதி விஜய் வைத்திருந்த டொயோட்டா இன்னோவா கிரிஸ்டல் (Toyota Innova Crysta) கார் மிகவும் பிரபலம். இதன் விலை ரூ.20 லட்சம் முதல் ரூ.26.05 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த கார் வாங்கிய பின்னர், தளபதிக்கு அடிக்கடி கார் வாங்குவதே ஒரு ஹாபியாக மாறிப்போனது. அடுத்தடுத்து சொகுசு கார்கள் பலவற்றை வாங்கி அடுக்கினார். இவர் கட்டியுள்ள வீட்டில், கார் நிறுத்துவதற்கு என்றே லிப்ட்டிங் மாடல் பார்க்கிங் இருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள். சரி இவர் வாங்கி வைத்திருக்கும் சொகுசு கார்கள் என்றால், பல பிரபலங்கள் வாங்க நினைக்கும் கார்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட். இந்த காரின் விலை சுமார் ரூ.8 கோடி ஆகும்.
அதே போல் சமீப காலமாக பல பிரபலங்கள் வைத்திருக்கும் ஆடி A8 L மாடல் கார். இந்த கார் இந்தியாவில் அறிமுகமாகும் போதே தளபதி போனி பண்ணி விட்டாராம். காரணம் இந்த மாடல் மீது உள்ள அட்ராக்ஷன் என கூறப்படுகிறது. இதன் விலை ரூ.1.58 கோடி ஆகும்.
தளபதி விஜய் வாங்கி வைத்திருக்கும் மிகவும் காஸ்டிலியான கார்களில் ஒன்று ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் பாண்டம் (Rolls-Royce Ghost Phantom) இந்த காரின் ரூ.8.99 கோடி.
தளபதி விஜய்யின் மனைவி சங்கீதாவும் ஒரு கார் பிரியர் தான். இவருக்கு பொதுவாக பி.எம்.டபிள்யூ வகை கார்கள் தான் பிடிக்கும் என கூறப்படுகிறது. எனவே விஜய் மனைவியின் ஆசை படி வாங்கிய எக்ஸ் 6 (BMW X6) சொகுசுக் காரின் விலை ரூ.1.04 கோடி முதல் ரூ.1.11 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
பார்ப்பதற்கே செம்ம கியூடாகவும், டிரைவ் பண்ணுவதற்கு ஸ்மூத்தாகவும் பீல் பண்ண வைக்கும் தளபதி விஜய் ஃபேவரட் கார்களில் ஒன்று தான் நிசான் எக்ஸ்-ட்ராய் (Nissan X-Trai) இந்த காரின் விலை ரூ.26 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
BMW 7-Series மனைவிக்கு பிடித்த பிராண்ட்டட் காராச்சே மனுஷன் விடுவாரா? இந்த காரை வாங்கி வைத்துள்ளது மட்டும் இன்று, சென்னையில் எங்கு ஃபேலியோடு சென்றாலும் இந்த காரை தான் எடுத்து செல்வார்.
Mercedes Benz GLA கரையும் தளபதி விட்டு வைக்கவில்லை. இந்த கார் பார்ப்பதற்கே... ஒரு பிரமாண்ட தோற்றத்தை கொடுக்க கூடியது. இதுவே தளபதியை கவர்த்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த காரின் விலை ரூ.89 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் தளபதியிடம் சமீப காலமாக பலர் வைத்திருக்கும், மினி கூப்பர் எஸ் (Mini Cooper S) காரும் உள்ளது. இந்த காரின் விலை ரூ.41.20 லட்சம் முதல் ரூ.52.50 லட்சம் வரை இருக்கும் என தெரிகிறது.
ஒருமுறை பார்த்து தனக்கு பிடித்து விட்டால், விலை அதிகமான கார் மட்டும் அல்ல குறைந்த விலை கொண்ட கார்களையும் வாங்கிவிடும் மனப்பான்மை கொண்டவர் தான் தளபதி, அந்த வகையில்... தளபதி விஜய் வாங்கிய மாருதி சுசுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) காரின் விலை ரூ.5.3 லட்சம் முதல் ரூ.6.6 லட்சம் வரை இருக்கும்.
ஆரம்ப காலத்தில் இவர் வைத்திருந்த சில கார்கள் இவரிடம் தற்போது இல்லை என கூறப்படும் நிலையில்... மொத்தம் 19 கார்கள் இவரிடம் இருப்பதாக கூறப்படுகிறது. இனியும் புது கலெக்ஷனுடன் சொகுசு கார்கள் வெளியானால் அதையும் அசராமல் வாங்குவார் நம் தளபதி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.