தல அஜித்தின் Good Bad Ugly.. வில்லனுக்காக பாலிவுட் பக்கம் செல்லும் ஆதிக் - இருவரிடம் நடக்கும் பேச்சுவார்த்தை!

First Published Apr 15, 2024, 4:08 PM IST

Good Bad Ugly : தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி பட பணிகள் முடிந்த உடனேயே ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகும் Good Bad Ugly என்ற படத்தில் நடிக்கவுள்ளார் தல அஜித்.

vidaamuyarchi

பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தற்பொழுது தல அஜித் அவர்கள் நடித்துவரும் விடாமுயற்சி பட பணிகள் நிறைவடைய உள்ள நிலையில், இவ்வாண்டு இறுதிக்குள் அந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது அடுத்த பட பணிகளை அஜித் விரைவில் துவங்க உள்ளார். 

Anna : ரத்னாவை மிரட்டிய முத்துபாண்டி... அரிவாளுடன் ஆவேசமாக கிளம்பிய ஷண்முகம் - அண்ணா சீரியலில் அடுத்த சம்பவம்

Good bad ugly movie

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்தபடியாக உருவாக உள்ள திரைப்படம் தான் "குட் பேட் அக்லி" இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கின்றார் தல அஜித்.

John Abraham

விடாமுயற்சி பட பணிகள் முடிந்த உடனேயே இந்த திரைப்பட பணிகளை தல அஜித் துவங்கு உள்ள நிலையில் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அடுத்த கட்ட பணிகளை ஆதிக் ரவிச்சந்திரன் துவங்கியுள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர்கள் ஜான் ஆபிரகாம் மற்றும் பாபி தியோல் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அதில் ஆபிரகாம் இந்த திரைப்படத்தில் கமிட்டாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

GOAT : ரத்த வெறியை தூண்டும் தளபதி விஜய்.. DGP அலுவலகத்தில் பரபரப்பு புகார் - என்ன காரணம்? முழு விவரம்!

click me!