ரஜினியை விட 100 கோடி அதிக சம்பளத்துடன் முதலிடத்தில் விஜய்! தமிழ் சினிமாவின் டாப் 10 ஹீரோஸின் Salary விவரம் இதோ

First Published Apr 4, 2024, 2:08 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், அஜித், ரஜினி, கமல் உள்ளிட்ட டாப் 10 நடிகர்களின் சமீபத்திய சம்பள விவரம் பற்றி விரிவாக பார்க்கலாம்.

விஜய் (Vijay)

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் நடிகர் விஜய் தான் முதலிடத்தில் உள்ளார். அவர் தற்போது நடித்து வரும் கோட் படத்திற்கு ரூ.200 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம். இதற்கு அடுத்தபடியாக அவர் நடிக்க உள்ள தளபதி 69 படத்துக்காக அவருக்கு ரூ.250 கோடி சம்பளம் பேசப்பட்டு இருக்கிறதாம்.

அஜித் (Ajith)

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் அஜித் இரண்டாம் இடத்தில் உள்ளார். அவர் நடிப்பில் தற்போது விடமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. அப்படத்திற்காக அவருக்கு ரூ.105 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு அடுத்தபடியாக தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி நிறுவனம் தயாரிக்கும் குட் பேட் அக்லி படத்துக்காக ரூ.163 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறாராம்.

ரஜினி (Rajini)

இந்த பட்டியலில் நடிகர் ரஜினிக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. தற்போது அவர் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்காக அவருக்கு ரூ.140 முதல் ரூ.150 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளாராம். நடிகர் விஜய் அவரை விட ரூ.100 கோடி அதிகம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Chiyaan 62 : ‘சீயான் 62’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கப்போவது இந்த நடிகையா? வெளியான அசத்தல் அப்டேட்

கமல் (Kamal)

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளார் கமல்ஹாசன். அவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2, இந்தியன் 2, தக் லைஃப், கல்கி என அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்கள் உருவாகி வருகின்றன. அவர் ஒரு படத்துக்காக ரூ.120 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

சூர்யா (Suriya)

மேற்கண்ட நான்கு நடிகர்களும் ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வரும் நிலையில், அவர்களுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்தை நடிகர் சூர்யா பிடித்துள்ளார். அவர் நடிப்பில் தற்போது கங்குவா என்கிற பிரம்மாண்ட பட்ஜெட் படம் உருவாகி வருகிறது. அப்படத்திற்காக் ரூ.60 கோடி சம்பளம் வாங்குகிறாராம் சூர்யா.

மற்ற நடிகர்கள் (Actors Salary)

சூர்யாவுக்கு அடுத்தபடியாக ரூ.55 கோடி சம்பளத்துடன் நடிகர் சிவகார்த்திகேயன் ஆறாவது இடத்தில உள்ளார். அவரைத் தொடர்ந்து ரூ.50 கோடி சம்பளத்துடன் நடிகர் தனுஷ் 7-ம் இடத்தை பிடித்திருக்கிறார். இதையடுத்து 8வது இடத்தில் நடிகர் கார்த்தி உள்ளார். அவர் ரூ.28 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். இதற்கு அடுத்தபடியாக 9 மற்றும் 10ம் இடத்தை சிம்பு மற்றும் விஷால் பிடித்துள்ளனனர். அவர்கள் ஒரு படத்துக்கு ரூ.25 கோடி சம்பளமாக வாங்குகிறார்களாம்.

இதையும் படியுங்கள்... Simran: சிம்ரனை காதலித்து கழட்டிவிட்ட நடிகர்கள் இத்தனை பேரா? இடுப்பழகியின் சீக்ரெட் லவ் ஸ்டோரி பற்றி தெரியுமா?

click me!