Skin Allergy In Summer : கோடையில் சரும அலர்ஜியா...? அப்ப உடனே 'இந்த' டிப்ஸ யூஸ் பண்ணுங்க..இனி கவலையே வேண்டாம்!

First Published Apr 11, 2024, 7:57 PM IST

கோடையில் சரும அலர்ஜி ஏற்படுவது வழக்கம். இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் பின்பற்ற வேண்டிய சில வீட்டு வைத்தியங்களை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

கோடை காலம் வந்தாலே பலருக்கு சூரிய ஒளி மற்றும் வியர்வை காரணமாக தோல் வெடிப்பு அல்லது ஒவ்வாமை ஏற்பட தொடங்குகிறது. இதற்காக பல வகையான மருந்துகளையும், கிரீம்களையும் பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்காது. எனவே, இதுபோன்ற சூழ்நிலையில் சருமத்தை பராமரிப்பது மிகவும் அவசியம். இதற்கு நீங்கள் சில வீட்டு முறைகளை பின்பற்றினால் மட்டும் போதும்.

ஒவ்வாமைக்கான காரணம்: கோடை வெயில் தாக்கத்தால், சருமம் மோசமாக வறண்டு போகும். அதே நேரத்தில் வியர்வை மற்றும் தூசி காரணமாக சருமத்தில் சிவப்பு திட்டுகள், பருக்கள் அல்லது சொறி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

கற்றாழை: கோடை வெயில் தாக்கத்தால் சருமத்தில் ஏற்படும் அலர்ஜியை போக்க கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம். இதற்கு அலர்ஜி இருக்கும் இடத்தில் கற்றாழை ஜெல்லை தடவினால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

தயிர்: கோடை வெயில் தாக்கத்தால் சருமத்தில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்பட்டால் தயிரை பயன்படுத்துங்கள். இது உங்களுக்கு நல்ல நிவாரணம் தரும். எனவே, பாதிக்கப்பட்ட இடத்தில் தயிரை தடவினால் குளிர்ச்சி ஏற்படும். இது ஒரு இயற்கை சுத்திகரிப்பாக செயல்படுகிறது.

ஐஸ் கட்டிகள்: உஷ்ணத்தால், சருமத்தில் எரிச்சல் அல்லது அலர்ஜி ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட இடத்தில் ஐஸ் கட்டி தடவினால் நிவாரணம் கிடைக்கும். இதற்கு ஒரு துணியில் ஐஸ் கட்டிகள் போட்டு அதை கட்டி, அரிப்பு உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

இதையும் படிங்க: வெயிலில் சருமம் எரியாமல் இருக்க பெஸ்ட் டிப்ஸ் இதோ..உங்களுக்காக..!

வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் சூரிய ஒளியால் ஏற்படும் வெடிப்புகளை அகற்ற உதவுகிறது. இதற்கு, வெள்ளரிக்காயை பேஸ்ட் செய்து சருமத்தில் தடவ வேண்டும்.

இதையும் படிங்க:  Beauty Tips : கோடையில் முகம் பொலிவாக இருக்க 'இந்த' சாக்லேட் ஃபேஸ் பேக்குகளை ஒருமுறை ட்ரை பண்ணுங்க!!

கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய்: கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெயை கோடையால் சருமத்தில் ஏற்படும் சொறியை நீக்க பயன்படுத்தலாம். இதற்கு கற்பூரத்தை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் அதை தடவினால் நிவாரண கிடைக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

படிகாரம்: கோடை தாக்கத்தால் சருமத்தில் ஏற்படும் அலர்ஜி, அரிப்பு அல்லது சொறியை போக்க படிகாரத்தை பயன்படுத்தலாம். எனவே, நீங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் படிகாரத்தை தடவினால் அலர்ஜி, சொறி, அரிப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் நீங்கள் விரும்பினால் தேங்காய் எண்ணெயும் கலந்து தடவலாம்.

click me!