Jahnvi Net Worth: 5 வருடத்தில் அசுர வளர்ச்சி கண்ட ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்! வீடு, கார், பேங்க்பேலன்ஸ் விவரம்

Published : Dec 04, 2023, 10:14 PM IST

திரையுலகில் அறிமுகமான 5 வருடத்தில், அசுர வளர்ச்சி கண்டுள்ள நடிகை ஜான்வி கபூரின் சொத்து மதிப்பு மற்றும் வங்கி இருப்பு தொகை உள்ளிட்ட பல விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.  

PREV
110
Jahnvi Net Worth: 5 வருடத்தில் அசுர வளர்ச்சி கண்ட ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்! வீடு, கார், பேங்க்பேலன்ஸ் விவரம்

பிரபல தென்னிந்திய நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர். பாலிவுட் பட இயக்குனர் கரண் ஜோஹரின் தடக் திரைப்படத்தை மூலம் கடந்த 2018 -ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானார்.  இதை தொடர்ந்து இவர் நடித்த குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள் திரைப்படம் கடந்த 2020-ஆம் வெளியாகி பலரது பாராட்டுகளையும், ஜான்வி கபூருக்கு சில விருதுகளையும் பெற்று தந்தது.

210

இதை தொடர்ந்து  ரூஹி , குட் லக் ஜெர்ரி, மிலி போன்ற படங்களால் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தார். ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் படங்களை விட, ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களை அதிகம் தேர்வு செய்து நடித்தார். தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும்... ஸ்ரீதேவியை மிஞ்சும் அளவிலான நடிப்பை இவர் வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும்... ஏர்போட்டில் பிரபல நடிகரை சந்தித்து காலில் விழுந்த ஜோவிகா! வீடியோ

310

ஜான்வி கபூர் திரையுலகில் அறிமுகமாகி 5 வருடமே ஆகும் நிலையில்... பல கோடி சொத்துக்கு அதிபதியாக உள்ளார். சிறு வயதில் இருந்தே கோல்டன் ஸ்பூன் குழந்தையாக தன்னுடைய அம்மாவால் செல்லமாக வளர்க்கப்பட்ட இவருக்கு... ஸ்ரீதேவியின் இழப்பு மிகப்பெரிய இடி என்றாலும், அதனை கடந்து தற்போது பாலிவுட் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக மாறி, கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
 

410

தன்னுடைய தந்தை மற்றும் தாய் சம்பாத்தியம் இல்லாமல்... தனக்கான தேவைகளை அவரே பூர்த்தி செய்து கொள்ளும் அளவுக்கு வளர்ந்துள்ளார். மேலும் பல ஊடக அறிக்கைகளின்படி, ஜான்வி கபூரின் நிகர மதிப்பு 2022 இல் சுமார் ரூ. 58 முதல் 65 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Pavithra Lakshmi: சேலை மாராப்பை விளக்கி... கல் பதித்த ஜாக்கெட் அழகை காட்டி இளம் நெஞ்சை அப்செட் செய்த பவித்ரா!
 

510

ஜான்வி ஒரு படத்திற்கு தனது நடிப்புக்கான கட்டணமாக சுமார் 5 கோடி ரூபாய் முதல் 8 கோடி வரை வாங்குகிறார். நடிப்பு, மாடலிங் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் தோன்றுவதைத் தவிர, அவருக்கு சமூக ஊடகங்களிலும் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இன்ஸ்டாகிராமில் 22.8  மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் உள்ளனர். 
 

610

தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பிராண்டுகளை விளம்பரப்படுத்த, ரூ.70-80 லட்சம் வசூலிக்கிறார். எனவே ஒவ்வொரு ஆண்டும், ஜான்வி கபூர் பிராண்ட் ஒப்புதல்கள் மற்றும் கட்டண கூட்டாண்மை மூலம் சுமார் 2.5 முதல் 3 கோடி வரை சம்பாதிக்கிறார்.  Nykaa, Mint ChocOn மற்றும் Reliance Trends உள்ளிட்ட பல பிரபலமான பிராண்டுகளுடன் அவர் பணிபுரிந்துள்ளார். 2019 ஆம் ஆண்டில், ஜான்வி கபூர் பெனட்டன் வாசனை திரவியங்களின் உலகளாவிய பிராண்ட் தூதராகவும் ஆனார்.

Vijay: விஜயகாந்த் செஞ்சதெல்லாம் மறந்து போச்சா? சூர்யா செஞ்சதை கூட செய்யாத தளபதி.. புலம்பும் ரசிகர்கள்!
 

710

ஜான்வி கடந்த ஆண்டு மும்பை ஜூஹூவில் தனக்கென ஒரு வீட்டை வாங்கியுள்ளார். டிரிப்ளெக்ஸ் அடுக்குமாடி குயிருப்பான இந்த வீட்டின் மதிப்பு 39 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. 3,456 சதுர அடி பரப்பளவைக் கொண்ட இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் ஆறு கார் பார்க்கிங் இடங்கள் ஜான்விக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 
 

810

ஜான்வி இந்த வீட்டை வாங்குவதற்கு முன்பு, லோகண்ட்வாலாவில் தனது குடும்பத்துடன் கிரீன் ஏக்கரில் பீச் வியூ கொண்ட வீட்டில் வசித்து வந்தார். இதை தொடர்ந்து சமீபத்தில், ஜான்வியின் தந்தை பாந்த்ராவில் சுமார் 65 கோடி மதிப்பில் ஒரு வீட்டை  வாங்கினார். அதில் தான் ஜான்விகபூரின் தங்கை வசித்து வருகிறார்.

காதலிக்காக கூலி வேலை.! காதல் கோட்டை படத்தை மிஞ்சிய கோலங்கள் சீரியல் நடிகர் அபிஷேக் சங்கரின் லவ் ஸ்டோரி!
 

910

இதை தவிர ஜான்வி ரூ.67.15 லட்சம் மதிப்புள்ள Mercedes GLE 250d கார்,  ரூ. 82.9 லட்சம் மதிப்புள்ள BMW X5, ரூ. 88.28 லட்சம் மதிப்புள்ள Mercedes Benz S-Class மற்றும் ரூ. 1.98 கோடி மதிப்புள்ள Mercedes Maybach S560 ஆகியவற்றை வைத்திருக்கிறார். 

 

1010

பாலிவுட் படங்களை தாண்டி, தெலுங்கு சினிமாவிலும் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்து வரும் ஜான்வி தன்னுடைய சொந்த நுழைப்பில் மட்டும் சுமார் 65 கோடிக்கும் மேல் சம்பாதித்துள்ளார் என கூறப்படுகிறது. இவரது, கார், வீடு, நகைகள் தவிர... 10 கோடிக்கும் மேல் பேங்க் பேலன்ஸ் வைத்துள்ளார் என கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Read more Photos on
click me!

Recommended Stories