கவுண்டமணியுடன் இணைந்து நடித்துள்ள 'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகர்! புகழ்ந்து தள்ளிய காமெடி கிங்.!

First Published Apr 29, 2024, 4:12 PM IST

நடிகர் கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தில் நடித்துள்ள விஜய் டிவி சீரியல் நடிகரை... கவுண்டமணி புகழ்ந்து தள்ளியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
 

விஜய் டிவியில் TRP-யில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வரும் சீரியல் 'சிறகடிக்க ஆசை' இந்த சீரியலில் நடித்து வரும் அனைவருக்குமே ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து, நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதே போல் சீரியல் மூலம் பிரபலமான நட்சத்திரங்கள் அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகளையும் கை பற்றி வருகின்றனர்.
 

அந்த வகையில் தற்போது 'சிறகடிக்க ஆசை சீரியலில்' ஹீரோ முத்துவின் நண்பன் செல்வம் என்கிற கேரக்டரில் நடித்து வருபவர் பழனியப்பா. இவர் லொள்ளு சபா நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறிமுகமாகி, பின்னர் ஏராளமான திரைப்படங்களில் சைடு ஆர்டிஸ்ட்டாகவும், சுமார் 100க்கும் மேற்பட்ட சீரியல்களில் சிறிய சிறிய வேடத்திலும் நடித்துள்ளார்.

Samantha: கேக் முன்பு கண்களை மூடி அமர்ந்திருக்கும் அழகு சிலை.! சமந்தாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

இவர் தற்போது நடிகர் கவுண்டமணி மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ள 'ஒத்த ஓட்டு முத்தையா' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கவுண்டமணி முன்பு நீண்ட டயலாக் ஒன்றை பழனியப்பா பேசுவது போல் படமாக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் அந்த பெரிய டயலாக்கை முதல் ஷாட்டிலேயே பேசி அனைவரையும் வியக்க வைத்தாராம் பழனியப்பா.

இதை தொடர்ந்து பழனியப்பாவை அழைத்த கவுண்டமணி நீ யாருப்பா என கேட்க, அவர் தன்னுடைய ஸ்டாண்ட் அப் காமெடி பயணத்தில் இருந்து, பின்னர் சீரியல், திரைப்படம் என தான் கடந்து வந்த பாதையை பற்றி கூற, நீ கண்டிப்பாக பெரிய நடிகராக வருவாய் என புகழ்ந்து தள்ளியுள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Radha: சுந்தரா ட்ராவல்ஸ் நடிகை ராதா தாக்கியதில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி! போலீசில் பரபரப்பு புகார்!
 

click me!