கொரோனா குமார் படத்தில் நடிக்க காசு வாங்கிட்டு டிமிக்கி கொடுத்த சிம்பு... அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

First Published Aug 30, 2023, 8:44 AM IST

கொரோனா குமார் படத்தில் நடிக்க காசு வாங்கிவிட்டு நடிக்காமல் தள்ளிப்போட்டு வந்த நடிகர் சிம்புவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

simbu

டி.ராஜேந்தரின் மகனான சிம்பு, தன் தந்தையை போலவே நடிகர், பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். திறமைவாய்ந்த நடிகரான சிம்பு சிக்காத சர்ச்சைகளே இல்லை என சொல்லும் அளவுக்கு இவர் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம். சமீப காலமாக உடல் எடையை குறைத்த பின்னர் சினிமாவில் எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் நடித்து வந்த சிம்புவுக்கு தற்போது கொரோனா குமார் படத்தால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

silambarasan

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குனர் கோகுல், சிம்புவை ஹீரோவாக வைத்து இயக்க இருந்த திரைப்படம் தான் கொரோனா குமார். இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த 2021-ம் ஆண்டே வெளிவந்தாலும், அப்படம் இன்னும் தொடங்கப்படவில்லை. அப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தான் தயாரிப்பதாக இருந்தது. 

இதையும் படியுங்கள்... சென்னையில் ஜவான் படத்தின் ஆடியோ வெளியீடு விழா! எங்கே, எப்போ நடக்குது? முழு விவரம் இதோ

simbu, Isari ganesh

அதற்கு முன் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் சிம்பு வெந்து தணிந்தது காடு என்கிற திரைப்படத்தில் நடித்தார். அப்படமும் ஹிட்டானது. இதையடுத்து அவர் கொரோனா குமார் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் கமிட் ஆனார். அப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். இப்படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

corona kumar

அதன்படி கொரோனா குமார் படத்தில் நடிக்க நடிகர் சிம்புவுக்கு ரூ.4.5 கோடி முன்பணமாக கொடுக்கப்பட்டு ஒப்பந்தம் செய்த பின்னர், அப்படத்தில் நடிக்காமல் சிம்பு வேறு படங்களில் கவனம் செலுத்தி வருவதாக வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வருகிற செப்டம்பர் 19-ம் தேதிக்குள் ரூ.1 கோடிக்கான உத்தரவாதத்தை சிம்பு அளிக்காவிட்டால் அவர் மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படியுங்கள்... ஜவானில் ரொமாண்டிக் குத்து சாங்கிற்கு கவர்ச்சி நடனம் ஆடிய நயன்தாரா... வைரலாகும் ராமையா வஸ்தாவையா பாடல் வீடியோ

click me!