ஜவானில் ரொமாண்டிக் குத்து சாங்கிற்கு கவர்ச்சி நடனம் ஆடிய நயன்தாரா... வைரலாகும் ராமையா வஸ்தாவையா பாடல் வீடியோ
ஜவான் படத்திற்காக அனிருத் இசையமைத்த ராமையா வஸ்தாவையா பாடலின் வீடியோவை படக்குழு யூடியூப்பில் வெளியிட்டு உள்ளது.
பாலிவுட் திரையுலகில் பாட்ஷாவாக வலம் வருபவர் ஷாருக்கான். ஏற்கனவே இந்த ஆண்டு பதான் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்துள்ள ஷாருக்கான், தற்போது அடுத்தபட ரிலீசுக்கு தயாராகி உள்ளார். ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ள ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
அட்லீ இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியாமணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஜவான் திரைப்படம் மூலம் இசையமைப்பாளர் அனிருத்தும் பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளார். ஜவான் படத்திற்காக அவர் இசையமைத்த 2 பாடல்கள் இதுவரை வெளியாகி உள்ளன.
இதையும் படியுங்கள்... அட்லீயின் அடுத்த சம்பவம்... புர்ஜ் கலிஃபாவில் ரிலீசாகும் ஜவான் டிரைலர் - அதுவும் இந்த தேதியிலா?
அதில் ஒன்று வந்த இடம் என்கிற பாடல். மாஸான குத்துப் பாடலான இதனை அனிருத்தே மூன்று மொழிகளிலும் பாடி இருந்தார். இப்பாடலில் ஷாருக்கான் உடன் சேர்ந்து அட்லீயும் ஆட்டம் போட்டுள்ளார். இப்பாடல் வரவேற்பை பெற்றதை அடுத்து ஹையோடா என்கிற ரொமாண்டிக் பாடலை வெளியிட்டு இருந்தனர். இதில் ஷாருக்கானும் நயன்தாராவும் வேறலெவலில் ரொமான்ஸ் செய்திருந்தனர்.
இந்நிலையில், அடுத்ததாக ஒரு ரொமாண்டிக் குத்து பாடலை வெளியிட்டு உள்ளனர். ராமையா வஸ்தாவையா என்கிற பாடலை ஜவான் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இப்பாடலை தமிழில் அனிருத்தும், ரக்ஷிதாவும் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலில் நடிகை நயன்தாரா கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்டுள்ளார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... ஜெயிலர் பட வசூல் சாதனை எல்லாம் சல்லி சல்லியா நொறுங்கப்போகுது... ஆத்தாடி செப்டம்பரில் இத்தனை படங்கள் ரிலீஸா?