திரிஷா, நயன்தாராவை விட பணக்காரியாக இருக்கும் ஜோதிகா... அவரின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?

First Published Mar 7, 2024, 2:56 PM IST

தமிழ், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வரும் நடிகை ஜோதிகாவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Jyothika Suriya

மும்பையில் பிறந்த வளர்ந்தவர் ஜோதிகா. இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான முதல் திரைப்படம் வாலி. எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஜோதிகா. வாலி படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு ஜோதிகாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் பெற்றுத்தந்தது. இதையடுத்து பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தார். நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்த முதல் படம் இதுவாகும். 

Actress Jyothika

இப்படத்தில் ஜோடியாக நடித்தபோது தான் ஜோதிகாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. வாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா இயக்கிய 2-வது படமான குஷியிலும் ஹீரோயினாக நடித்தார் ஜோதிகா. நடிகர் விஜய்க்கு ஜோடியாக அவர் நடித்த இப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியதோடு ஜோதிகாவிற்கு நட்சத்திர அந்தஸ்த்தையும் பெற்றுக் கொடுத்தது. பின்னர் கமலின் தெனாலி, அஜித்துக்கு ஜோடியாக பூவெல்லாம் உன் வாசம், விஜய்யின் திருமலை, ரஜினிகாந்த் உடன் சந்திரமுகி என வரிசையாக ஹிட் படங்களில் நடித்து ராசியான ஹீரோயின் என பெயரெடுத்தார் ஜோ.

Suriya wife Jyothika

இதனிடைய சூர்யாவுக்கு ஜோடியாக அடுத்தடுத்த காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் போன்ற ரொமாண்டிக் படங்களில் நடித்தபோது இருவருக்கும் இடையேயான காதல் தீவிரமானது. இதனால் திருமணம் செய்துகொள்ளும் முடிவுக்கு வந்த இருவரும் குடும்பத்தினரிடம் பேசினர். ஆரம்பத்தில் சூர்யா வீட்டில் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் ஒருவழியாக பெற்றோரை சம்மதிக்க வைத்த சூர்யா, ஜோதிகாவை கரம்பிடித்தார். சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வரும்போதே சூர்யாவை கரம்பிடித்த ஜோதிகா, தன்னுடைய காதலுக்காக சினிமா கெரியரையே தியாகம் செய்தார்.

இதையும் படியுங்கள்... நான் தோத்துட்டேன்... விக்னேஷ் சிவன் உடனான விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் நயன்தாரா போட்ட சோகமான பதிவு..!

Jyothika salary

திருமணத்துக்கு பின் நடிப்புக்கு முழுக்கு போட்ட ஜோதிகாவுக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்தன. குழந்தைகள் வளார்ந்த பின்னர் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட ஜோதிகா, மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்தார். அவர் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸில் தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அப்படி அவர் நடித்த 36 வயதினிலே, பொன்மகள் வந்தாள், ராட்சசி போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. தமிழ் மட்டுமின்றி மலையாளம் இந்தி போன்ற மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் ஜோ.

Jyothika Business

அண்மையில் மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக இவர் நடித்த காதல் தி கோர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து இந்தியில் ஷைத்தான் என்கிற படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஜோதிகா. இப்படி பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக வலம் வரும் ஜோதிகா, ஒரு படத்துக்கு ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் கலக்கி வரும் ஜோதிகா சூர்யாவுடன் சேர்ந்து 2டி என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார் ஜோதிகா. 36 வயதினிலே தொடங்கி சூரரைப் போற்று வரை அந்நிறுவனம் தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து வருகிறது. தயாரிப்பு நிறுவனம் மூலமும் கோடி கோடியாக சம்பாதித்து வருகிறார் ஜோ.

Jyothika net Worth

சென்னையில் நடிகை ஜோதிகாவுக்கு சொந்தமாக இரண்டாயிரம் சதுர அடியில் சொகுசு பங்களா இருக்கும் நிலையில், அண்மையில் குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆன அவர் அங்கு ரூ.70 கோடிக்கு அப்பார்ட்மெண்ட் வீடு ஒன்றையும் விலைக்கு வாங்கினார். இதுதவிர தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிப்பதன்மூலமும் ஜோதிகாவுக்கு பல கோடி வருமானம் வருகிறது. சினிமா மற்றும் பிசினஸ் இரண்டிலும் கொடிகட்டிப் பறக்கும் நடிகை ஜோதிகாவின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.330 கோடிக்கு மேல் இருக்குமாம். இவருக்கு சொந்தமாக BMW, ரேஞ்ச் ரோவர், Audi போன்ற விலையுயர்ந்த ஆடம்பர கார்களும் உள்ளதாம்.

இதையும் படியுங்கள்... அருந்ததி முதல் மஞ்சும்மல் பாய்ஸ் வரை... தமிழ் சினிமா தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய அக்கட தேசத்து படங்கள் இதோ

click me!