லைகாவிடம் சிபாரிசு... ஜேசன் சஞ்சய்யை இயக்குனராக்க விஜய்யை விட அதிகம் ரிஸ்க் எடுத்தது இவர்தானாம்

First Published Oct 25, 2023, 10:42 AM IST

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக முக்கிய காரணமாக இருந்தவர் பற்றி சித்ரா லட்சுமணன் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

Jason sanjay, vijay

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். இவருக்கு ஜேசன் சஞ்சய் என்கிற மகன் உள்ளார். இவர் கனடாவில் பிலிம் மேக்கிங் படித்துவிட்டு பல்வேறு குறும்படங்களை இயக்கினார். இதையடுத்து அவருக்கு சினிமாவில் இயக்குனராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அண்மையில் வெளியானது.

Subaskaran, Jason sanjay

ஜேசன் சஞ்சய் இயக்க உள்ள முதல் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவர் இயக்க உள்ள முதல் படத்தில் நடிகர் கவின் தான் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Jason sanjay

நடிகர் விஜய் தனது மகன் சஞ்சய்யை நடிகனாக்க வேண்டும் என்று தான் விரும்பினாராம். அதுவும் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சஞ்சய்க்காக தயார் செய்து வைத்திருந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்துப் போக, இதுகுறித்து சஞ்சய்யிடம் பேசியுள்ளார் தளபதி. ஆனால் சஞ்சய் தனக்கு நடிப்பில் மீது ஆர்வமில்லை, தான் இயக்குனராக விரும்புவதாக கூறியதை அடுத்து மகன் விருப்பப்படியே செய்ய விஜய்யும் அனுமதி கொடுத்துவிட்டாராம்.

vijay, sangeetha

ஆனால் சஞ்சய் முதல் படமே லைகா நிறுவனம் தயாரிப்பதற்கு பின்னணியில் விஜய் இருப்பதாக விமர்சனம் எழுந்தது. அவர் தான் லைகாவிடம் பேசி இந்த வாய்ப்பை பெற்றுத்தந்ததாக தகவல்கள் பரவின. ஆனால் உண்மையில், விஜய்யின் மனைவி சங்கீதா தான் லைகாவிடம் பேசி மகனுக்கு இந்த வாய்ப்பை பெற்றுத்தந்து உள்ளாராம். மகனை இயக்குனராக்கி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட சங்கீதா, அவர்களிடம் பேசி மகனை இயக்குனராகவும் ஆக்கி உள்ளார் என பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... ரஜினி வீட்டில் நவராத்திரி கொண்டாட்டம்... துர்கா ஸ்டாலின் முதல் மீனா வரை படையெடுத்து வந்த பிரபலங்களின் போட்டோஸ்

click me!