Sandhya Raagam: மாயா விஷயத்தில் அதிர்ச்சி கொடுத்த ஜோசியர்! உண்மையை மறைக்கும் ஜானகி - சந்தியா ராகம் அப்டேட்!

First Published May 4, 2024, 6:51 PM IST

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுமங்கலி பூஜை நடந்து முடிய புருஷன் சாப்பிட்ட தட்டில் தான் பொண்டாட்டி சாப்பிடணும் என்று ரமணி சொல்லிய நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 
 

அதாவது, மாயா யாருக்கும் தெரியாமல் கிச்சனுக்கு வந்து சீனு சாப்பிட்ட தட்டில் இருக்கும் சாப்பாட்டை எடுத்து சாப்பிட திடீரென விக்கல் வர சீனுவே தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க மாயா அவனிடம் மாட்டி கொள்கிறாள். அதன் பிறகு இருவரும் ரொமான்ஸாக பேசி கொள்கின்றனர். சீனு சென்றதும் ஜானகி வர மாயா சீனு சாப்பிட்ட தட்டில் சாப்பிட்டு கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். 
 

அடுத்து ஜோசியரை வந்து சந்திக்க அவர் உன்னுடைய சொந்தம் ஒன்னு உன்கூடவே இருக்க போகுது, அதனால் உன் குடும்பத்துக்கும் உன் கௌரவத்துக்கும் களங்கம் வர போகுது. ரெண்டுத்துல எதையாவது ஒன்னை தான் நீ தடுத்து நிறுத்த முடியும் என்று சொல்லி ஷாக் கொடுக்கிறார். 

Ramarajan Sister Death: நடிகர் ராமராஜனை கண்ணீரில் ஆழ்த்திய மரணம்! கதறியபடி.. சொந்த ஊருக்கு புறப்பட்டார்!

பிறகு வீட்டிற்கு வரும் ஜானகி மாயாவிடம் சீனு விஷயமாக பேச போக குறுக்கே வரும் தனம் ஸ்டேட் லெவல் மேட்சில் வெளியூர் போய் விளையாட போறேன், இதுவரைக்கும் காலேஜ்லயே விளையாடியதுனால் அப்பாவை சமாளிச்சிட்டேன், இப்போ வெளியூர் போகணும், நீதான் என்னை கூட்டிட்டி போகணும் என்று சொல்ல ஜானகி சரி என்று சம்மதம் சொல்கிறாள். மேலும் மாயாவிடம் அப்பறம் பேசி கொள்ளாமல் என்றும் தள்ளி போடுகிறாள். 

பிறகு பக்கத்து ஊரில் உள்ள கோவிலுக்கு மாயாவையும் தனத்தையும் அழைத்து செல்வதாக ரகுராமிடம் முதல் முறையாக பொய் சொல்லி அழைத்து வருகிறாள் ஜானகி. சீனுவும் மணிவண்ணனும் வேலையாட்களுக்கு பணம் கொடுக்க போவதாக சொல்லி விட்டு இவர்களுடன் கிளம்பி வருகின்றனர். சீனு லவ் சாங்காக போட்டு மாயாவை பார்க்க ஜானகி எதுவும் பேச முடியாமல் தவிக்கிறாள். 

Seetha Raman Climax: அம்பலமான சதி வேலைகள்! சுட்டு கொள்ள துணிந்த மகா.. சீதா ராமன் பரபரப்பான கிளைமேக்ஸ்!

அடுத்து இவர்கள் கோவிலுக்கு வர ஷாருவின் அப்பா லிங்கம் இதை பார்த்து சாருவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்கிறார். ஷாரு சீனு அங்க இருக்கானா, அப்படினா ஏதோ தப்பா தெரியுது அவங்கள பாலோ பண்ணுங்க என்று சொல்லி போனை வைக்க லிங்கம் இவர்களை பின் தொடர்ந்து வர தனம் காஸ்ட்யூமை மாற்றி கொண்டு பேட்மிட்டன் விளையாடுவதையும் இவர்கள் அங்கு இருப்பதையும் பார்த்து ஷாக் ஆகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

click me!