இதயத்தில் அடக்க முடியாத அளவுக்கு அன்பு.! சாய் பல்லவியின் தங்கை பூஜா வெளியிட்ட நிச்சயதார்த்த போட்டோஸ்!

First Published Jan 23, 2024, 3:15 PM IST

நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணனுக்கும் அவருடைய காதலர் வினீத்துக்கும் ஜனவரி 21-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், இதுகுறித்த புகைப்பங்களை பூஜா வெளியிட, ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான 'பிரேமம்'  படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இந்த படத்தில் மடோனா செபாஸ்டியன், மற்றும் அனுபமா பரமேஸ்வரன் என மற்ற இரு நாயகிகள் அறிமுகமாகி இருந்தாலும், அதிகமான ரசிகர்களை கவர்ந்து... முன்னணி நடிகை என்கிற லிஸ்டில்  இடம்பிடித்து அதை தக்கவைத்து கொண்ட பெருமை சாய் பல்லவியை தான் சேரும்..

மற்ற நடிகைகளுடன் ஒப்பிட்டால், சாய் பல்லவி ரசிகர்களுக்கு மிகவும் தனித்துவமானவராகவே உள்ளார். அதற்க்கு காரணம், பெரும்பாலும் மேக்கப் இல்லாத சிவந்த பருக்கள் கொண்ட முகம், ஸ்ட்ரைட்னிங் செய்யாத நீண்ட தலை முடி, கவர்ச்சி இல்லாத உடைகள், என கூறலாம். இவர் ஒரு மருத்துவர் என்றாலும் சிறு வயதில் இருந்தே டான்ஸ் கற்று வருவதால்... திரைப்படங்களில் எவ்வளவு கடினமான ஸ்டேப் கொடுத்தாலும் கில்லி போல் ஆடுபவர். இவரின் நடனத்துக்காகவே இவரை கமிட் செய்யும் இயக்குனர்களும் உள்ளனர்.

Ajith Photo: ஸ்லிம் ஃபிட்! ஸ்டைலிஷ் லுக்... அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் ரீசென்ட் போட்டோவை வெளியிட்ட ஷாலினி!

தென்னிந்திய மொழிகளில் டாப் நாயகிகளில் ஒருவராக இருக்கும் சாய் பல்லவி தற்போது சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க உள்ள, SK 21 படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்குகிறார்.

சாய் பல்லவி தற்போது நடிப்பில் படு பிசியாக இருப்பதாலோ என்னவோ... சாய் பல்லவிக்கு முன்பே அவரின் தங்கை பூஜாவுக்கு திருமணம் நடைபெற உள்ளது. சமீபத்தில் தன்னுடைய காதலர் வினீத்தை அறிமுகப்படுத்திய பூஜா கண்ணனுக்கு, இரண்டு நாட்களுக்கு முன்பு அதாவது ஜனவரி 21-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இதுகுறித்த சில புகைப்படங்களை பூஜா தற்போது வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகை விஜி சந்திரசேகரின் மகளுக்கு நடந்து முடிந்த திருமணம்! சூர்யா, உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நேரில் வாழ்த்து

குறிப்பாக குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ள பூஜா... ஒரு பெரிய குடும்பம், நிறைவான இதயங்கள் மற்றும் என் இதயத்தை அடக்க முடியாத அளவுக்கு அதிகமான அன்பு கிடைத்துள்ளது என கூறியுள்ளார். இந்த போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

click me!