திருமணத்திற்கு தேதி குறித்த ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ! ரகசியமாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்...கியூட் கிளிக்ஸ்

First Published May 14, 2022, 12:37 PM IST

RJ Vigneshkanth Marriage: பன்முக திறமை கொண்ட யூடியூபில் பிரபலம் ஆர்.ஜே விக்னேஷ்காந்துக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

rjvigneshkanth

நடிகர், விஜே, ஆர்.ஜே என பன்முகம் தன்மைக் கொண்டவர் விக்னேஷ்காந்த். இவர் தன்னுடைய காமெடி பேச்சாலும் டைமிங் கவுண்ட்டர்களாலும் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர். 

rjvigneshkanth

யூடியூப் வலைத்தளத்தில் ஸ்மைல் சேட்டை எனும் நிகழ்ச்சியைத் தொடங்கி படி படியான உயர்ந்து, தற்போது ப்ளாக்‌ஷீப், உனக்கென்னப்பா உள்ளிட்ட யூடியூப் சேனல்கள் மற்றும் பி.எஸ்.வேல்யூ ஓடிடி தளம் என மீடியாவில் பல துறைகளில் வெற்றிகரமாக இயங்கி வருகிறார்.
 

rjvigneshkanth

இவர் சினிமாவிலும் தோன்றி தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் நடிகராக முதன் முதலில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான சென்னை 28 திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் தோன்றி கிரிக்கெட் வர்ணணையாளராக நடித்திருந்தார்.

rjvigneshkanth

இதையடுத்து, அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர, மீசைய முறுக்கு திரைப்படத்தில் ஹிப் ஹாப் ஆதியின் நண்பனாக தனது அறிமுகத்தை கொடுத்தார். இதைத் தொடர்ந்து கார்த்தியின் தேவ், நட்பே துணை, மெஹந்தி சர்கஸ், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றி தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

rjvigneshkanth

இந்த நிலையில், தற்போது ஆர்.ஜே. விக்னேஷ்காந்துக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை ஆர்.ஜே. விக்னேஷ்காந் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அதில் அவர்  எங்களுடைய திருமண நிச்சயதார்த்தம் மிகவும் சிம்பிளாக நடந்ததாகவும், திருமணத்திற்கு அனைவருக்கும் அழைப்பு வரும் என்றும் தெரிவித்திருந்தார்.

rjvigneshkanth

இவர்களது நிச்சயதார்த்தத்திற்கு நண்பர்கள், உறவினர்கள் என நெருங்கிய வட்டாரங்கள் மட்டுமே, கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து, இந்த தம்பதிக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க...Sreenidhi Post: சிம்புவை கல்யாணம் பண்ண ஆசை.. ஆனால்,அது நடந்திருச்சு ...புது குண்டை தூக்கி போட்ட சீரியல் நடிகை!

click me!