உங்கள் துணை உங்களை ஏமாற்றுகிறார் என்பதை குறிக்கும் அறிகுறிகள் இவைதான்.. தம்பதிகளே கவனம்..

First Published Mar 19, 2024, 4:24 PM IST

உங்கள் துணை உங்களை ஏமாற்றலாம் என்பதற்கான அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

திருமண உறவில் உங்கள் துணை உங்களுக்கு உண்மையாக இருக்கிறாரா என்பதை குறிக்கும் சில அறிகுறிகள் உள்ளன. இந்த அறிகுறிகளை அடையாளம் காண்பது அவசியம். இந்த அறிகுறிகள் துரோகத்தை திட்டவட்டமாக சுட்டிக்காட்டவில்லை என்றாலும், அவை கவனம் செலுத்த வேண்டிய அடிப்படை சிக்கல்களைக் குறிக்கலாம். உங்கள் துணை உங்களை ஏமாற்றலாம் என்பதற்கான அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உங்கள் துணை அலுவலக வேலை நேரம் திடீரென அதிகரித்தால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். திடீரென உங்கள் துணை அலுவலகம் தொடர்பான வேலையில் பிசியாக இருந்தால் சில நேரங்களில் அது ஒரு எச்சரிக்கை அறிகுறியாகும். பொதுவாக அலுவலக நேரத்தை காரணமாக சொல்லியே தங்கள் துணையை ஏமாற்றுகின்றனர்.

Image: FreePik

உங்கள் துணை அவர்கள் இருக்கும் இடத்தைப் பகிர்வதை நிறுத்தினால், அது வெளிப்படைத்தன்மை இல்லாததைக் குறிக்கலாம். எனவே நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதே போல் உங்களிடம் காட்டும் அக்கறையின் அளவு குறைவது ஒரு கவலைக்குரிய அறிகுறியாக இருக்கலாம்.

உங்கள் துணை தங்களின் மேசேஜ் அல்லது அழைப்புகளை மறைத்தால், அவர் எதையோ உங்களிடம் இருந்து மறைக்கிறார் என்று அர்த்தம். உங்கள் முன்னிலையில் அவர்கள் தொலைபேசியில் பேசுவதைத் தவிர்த்தால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

Image: FreePik

உங்கள் வாழ்க்கை மற்றும் திட்டங்களில் ஆர்வம் காட்டாமல் இருந்தாலோ அல்லது அவர்களின் முன்னுரிமையில் மாற்றம் இருந்தாலோ அவர் உங்களை ஏமாற்றுகிறார் என்று அர்த்தம். நியாயமான விளக்கம் இல்லாமல் உங்களை நீண்ட நேரம் காத்திருக்க வைத்தால் அது உங்கள் மீது பற்றின்மையின் அறிகுறியாக இருக்கலாம்.

Image: FreePik

உங்களிடம் பேசும் போது உங்கள் துணை கண்களை பார்த்து பேசவில்லை எனில் அவர் எதையோ உங்களிடமிருந்து மறைக்கிறார் என்று அர்த்தம். தெளிவான காரணங்கள் இல்லாமல் அடிக்கடி வாதங்கள் செய்தாலோ அல்லது சண்டையிட்டாலோ அது அவருக்குள் மறைந்திருக்கும் பதட்டங்களை குறிக்கும். 

உங்கள் துணை எதிர்காலத் திட்டங்களைப் பற்றி பேசுவதைத் தவிர்த்தால், அது உறவைப் பற்றிய நிச்சயமற்ற தன்மையைக் குறிக்கலாம். அது உணர்வு பூர்வ நெருக்கத்தை அதிகரிக்கலாம். அவர்கள் சொன்னதை செய்யவில்லை என்றாலோ அல்லது அவர்கள் சொல்வதற்கும் செய்வதற்கும் இடையே முரண்பாடுகள் இருந்தாலோ அது நேர்மையற்ற தன்மையைக் குறிக்கலாம்.

உங்கள் கேள்விகளுக்கு கோபமாக பதிலளிப்பது அல்லது மழுப்பலாக பதில் சொல்வது ஆகியவை குற்ற உணர்வின் அடையாளமாக இருக்கலாம். அதே போல் உங்கள் துணை உங்களுடனான முக்கியமான உரையாடல்களைத் தவிர்த்துவிட்டால், அது சங்கடமான உண்மைகளைத் தவிர்க்கும் முயற்சியாக இருக்கலாம்.

இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்கள் துணையின் துரோகத்தை உறுதிப்படுத்த வேண்டிய அவசியமில்லை, ஆனால் உறவில் உள்ள அடிப்படை சிக்கல்களைக் குறிக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கும் எந்தவொரு கவலையையும் புரிந்துகொள்வதற்கும் அதை தீர்ப்பதற்கும் தகவல் தொடர்பு முக்கியமானது.

click me!