Rasi Palan : இந்த ராசிக்காரர்கள் உறவில் நீண்ட காலம் இருக்க மாட்டார்கள்..! உடனே பிரேக் அப் தான்!

First Published Apr 15, 2024, 9:00 PM IST

சிலர் நீண்ட காலம் ஒரே உறவில் இருப்பது மிகவும் கடினம். மனக்கசப்புகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து சொல்லுகிறார்கள். அந்தவகையில், உறவில் நீண்ட காலம் நீடிக்காத ராசிகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
 

மேஷம்: இந்த ராசிக்காரர்கள் இயல்பிலேயே கொஞ்சம் கோபம் இருக்கும். சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட இவர்கள் கோபப்படுவார்கள். இவர்கள் தங்கள் காதல் வாழ்க்கை சரியில்லை என்று உணரும்போது,   அந்த உறவில் இருந்து மெதுவாக வெளியேறி விடுவார்கள். 

விருச்சிகம்: இவர்களது உறவு முடிவுக்கு வரும் முன் அதை மேம்படுத்த முயற்சி செய்வார்கள். ஆனால், விஷயங்கள் கையை மீறிப் போவதாக அவர்கள் உணர்ந்தவுடன், உறவை உடனடியாக முடித்துக்கொண்டு, அதிலிருந்த வெளியேறுவார்கள். இருந்தாலும், இவர்கள் தங்கள் துணையை மறக்க நீண்ட காலம் எடுத்துக்கொள்கிறார்கள். 

இதையும் படிங்க:  Rasi Palan : இந்த 4 ராசி பெண்களை புரிந்து கொள்வது ரொம்பவே கடினம்..! ஏன் அப்படி தெரியுமா..?

துலாம்: இந்த ராசிக்காரர்கள் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட  மனம் வருந்துவார்கள். இவர்கள் துணையிடம் அதிகம் எதிர்பார்ப்பார்ப்பதால், அவர்கள் மனதிற்கு ஏற்றவாறு நடக்கவில்லை என்றால், உடனே இவர்கள் தங்கள் துணையை விட்டு பிரிந்து செல்ல விரும்புகிறார்கள். இதனால் தான் 
இவர்கள் யாருடனும் நீண்ட நாள் உறவில் இருக்க முடிவதில்லை.

இதையும் படிங்க:  Rasi Palan : இந்த 4 ராசி பெண்களை திருமணம் செய்தால் அதிர்ஷ்டம் உறுதி!! யாரெல்லாம் தெரியுமா..?

கும்பம்: இவர்கள் ஒரு உறவில் சிக்கிக் கொள்ள விரும்ப மாட்டார்கள். இவர்கள் காதலித்தாலும், விரைவில் பிரேக்அப்பும் நடக்கும். பங்குதாரர் இவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தால் மட்டுமே இவர்களின் உறவு தொடரும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!