மனைவிக்கு மாரடைப்பு.. சிகிச்சைக்கு பணமின்றி தவித்தேன்; கடவுள் போல வந்து உதவினார் ரஜினி- லிவிங்ஸ்டன் நெகிழ்ச்சி

First Published Mar 6, 2024, 1:11 PM IST

மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பணமின்றி தவித்தபோது நடிகர் ரஜினிகாந்த் பண உதவி செய்ததாக லிவ்விங்ஸ்டன் கூறி உள்ளார்.

Livingston, Rajinikanth

கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் சினிமா நடிகர்களில், அந்த பணத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவும் மனம் படைத்தவர்கள் வெகுசிலரே. அதில் முக்கியமானவர் தான் ரஜினிகாந்த். அவர் தன்னிடம் உதவி என நாடி வருபவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார். அவர் செய்யும் உதவிகள் பெரும்பாலும் வெளியில் தெரிவதில்லை. அதை ரஜினியும் விரும்பமாட்டார் என்பதால் யாரும் சொல்வதில்லை. அப்படி அண்மையில் அவர் செய்த பேருதவி குறித்து நடிகர் லிவ்விங்ஸ்டன் சமீபத்திய பேட்டியில் பேசி உள்ளார்.

livingston

அதன்படி நடிகர் லிவ்விங்ஸ்டன் மனைவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாம். அவரை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, சிகிச்சைக்கு பணமில்லாமல் தவித்தாராம். அந்த சமயத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்திலும் நடித்து வந்துள்ளார் லிவிங்ஸ்டன். ஒரு நாள் ஷூட்டிங்கில் உதவி இயக்குனர்களிடம் இதுபற்றி பேசி புலம்பி இருக்கிறார் லிவிங்ஸ்டன். இந்த தகவல் எப்படியோ ரஜினிகாந்த் காதுக்கு சென்றிருக்கிறது.

இதையும் படியுங்கள்... 27 வயசுலயே இத்தனை கோடி சொத்துக்களா? சினிமாவை போல் பிசினஸிலும் கொடிகட்டிப் பறக்கும் ராஷ்மிகாவின் Net Worth இதோ

Rajinikanth help for Livingston

இதைக் கேள்விப்பட்டதும் உடனடியாக லிவிங்ஸ்டனை அழைத்த ரஜினிகாந்த், உடனடியாக 15 லட்சம் பணத்தை எடுத்து கொடுத்து, மனைவிக்கு டிரீட்மெண்ட் பாருங்கனு சொன்னாராம். பணத்தை வாங்காமல் தயங்கி நின்ற லிவிங்ஸ்டனை பார்த்து, நான் உன் அண்ணன் மாதிரிடா, நான் கொடுத்தா வாங்கிக்க மாட்டியானு கேட்ட ரஜினி, இது பத்தவில்லை என்றால் மேலும் வாங்கிக் கொள்ளுமாறும் கூறினாராம். 

Superstar Rajinikanth

அவர் செய்த அந்த உதவியால் தான் தன்னுடைய மனைவி இன்று உயிருடன் இருக்கிறாள் என்று அந்த பேட்டியில் நெகிழ்ச்சியுடன் பேசி இருக்கிறார் நடிகர் லிவிங்ஸ்டன். மேலும் ரஜினியின் அலுவலத்தில் இருந்து காசை வாங்கிச் செல்லும்போது அங்கிருப்பவர்கள் அவர் நிறைய பேருக்கு உதவி செய்கிறார் என்று தன்னிடம் சொன்னதாக கூறிய லிவ்விங்ஸ்டன், அவர் ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க மருத்துவமனை கட்ட உள்ளதாகவும் கேள்விப்பட்டேன் என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... இத்தனை கோடியா? மகன் ப்ரீ வெட்டிங்கில் நடனமாடிய பிரபலங்களுக்கு பணத்தை வாரி இறைத்த முகேஷ் அம்பானி..

click me!