அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 4 மாவட்டங்களில் தரமான சம்பவம் இருக்காம்.. வானிலை மையம் அலர்ட்..!

First Published Dec 21, 2023, 8:30 AM IST

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

chennai meteorological

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. 

Tamilnadu Rain

இதன் காரணமாக 21-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், 22-ம் தேதி முதல் 26-ம் தேதிவரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

chennai rain

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

delta districts

இந்நிலையில், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

click me!