அடுத்த 3 மணிநேரத்தில் இந்த டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டப்போகுதாம்.. வானிலை மையம் அலர்ட் மெசேஜ்!

First Published Apr 21, 2024, 9:37 AM IST

அடுத்த 3 மணி நேரத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Tamilnadu Rain

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக  23-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24 முதல் 26 வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

Chennai Weather Update

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. 

இதையும் படிங்க: Chitra Pournami 2024: சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் போறீங்களா? குட்நியூஸ் சொன்ன அரசு போக்குவரத்து கழகம்!

Tamilnadu rain

இந்நிலையில் அடுத்த 3 மணிநேரத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

click me!