Public Holiday: தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி பொதுவிடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!

First Published Apr 5, 2024, 6:37 AM IST

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் பொதுவிடுமுறை தினம் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

lok sabha election 2024

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் 543 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணப்படுகிறது. இந்நிலையில் முதற்கட்டமாக 39 மக்களவைத் தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

Tamilnadu Government

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல்கள் கட்சிகள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்நிலையில், தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை என  தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இதையும் படிங்க: கொளுத்தும் வெயிக்கு இடையே வரும் கோடை மழை.. குட்நியூஸ் சொன்ன கையோடு அலர்ட் கொடுக்கும் வானிலை மையம்!

Shiv Das Meena

இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில்: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கிணங்க, தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார்.

click me!