எழுத்துப் பிழையால் பறிபோன மமிதா பைஜுவின் ஒரிஜினல் பெயர்... அப்போ பிரேமலு நாயகியின் நிஜ பெயர் இதுவா?

First Published May 10, 2024, 9:27 AM IST

பிரேமலு படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்ட நடிகை மமிதா பைஜுவின் ஒரிஜினல் பெயர் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Mamitha Baiju

மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த திரைப்படம் பிரேமலு. பட்டிதொட்டியெங்கும் மாஸ் ஹிட் அடித்த இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. பிரேமலு படத்தின் வெற்றிக்கு அப்படத்தில் ஹீரோயினாக நடித்த மமிதா பைஜுவும் ஒரு காரணம். அவரின் கியூட்டான நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. பிரேமலு படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

premalu actress Mamitha Baiju

பிரேமலு படத்தின் அதிரிபுதிரியான வெற்றியால் நடிகை மமிதா பைஜுவுக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ரெபல் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். இதைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ராட்சசன் படத்தின் இயக்குனர் ராம்குமார் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... ஹீரோயினா நடிக்க கூட இவ்வளவு கேட்கல... அக்காவாக நடிக்க டபுள் மடங்கு சம்பளம் கேட்ட நயன்தாரா - ஆடிப்போன படக்குழு

Mamitha Baiju original name

இயக்குனர் பாலா - நடிகர் சூர்யா கூட்டணியில் உருவான வணங்கான் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் மமிதா பைஜு. ஆனால் அப்படம் கைவிடப்பட்டதால் அதில் நடிக்கும் சான்ஸை மிஸ் பண்ணிவிட்டார் மமிதா. இதுதவிர தெலுங்கு திரையுலகில் இருந்தும் மமிதாவுக்கு பட வாய்ப்புகள் வரிசைகட்டி வருகின்றன. இதனால் தென்னிந்திய திரையுலகில் தற்போது டிரெண்டிங் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் மமிதா.

Mamitha Baiju name changed

நடிகை மமிதா பைஜுவின் ஒரிஜினல் பெயர் எழுத்திப்பிழையால் பறிபோனதாம். அவருக்கு அவரது பெற்றோர் வைத்த பெயர் நமிதா பைஜு. ஆனால் பிறப்பு சான்றிதழில் பெயர் எழுதும் போது தவறுதலாக மமிதா பைஜு என எழுதி இருக்கின்றனர். பின்னர் பள்ளியிலும் அதே பெயர் தொடர்ந்ததால் அதையே தன் பெயராக மாற்றிக்கொண்டாராம் மமிதா பைஜு. மமிதா என்பதற்கு ஸ்வீட் என்று அர்த்தமாம். அதற்கேற்றபடியே ஸ்வீட்டாக நடித்து வருகிறார் மமிதா.

இதையும் படியுங்கள்... Vijayakanth: கேப்டன் சார்பாக பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொண்டு கண்கலங்கிய பிரேமலதா விஜயகாந்த்!

click me!