பூஜை அறையில் 'இந்த' பொருட்களை வைக்காதீங்க.. வீட்டில் சண்டை சச்சரவுகள் வரும்.. பணம் தங்காது.. ஜாக்கிரதை!

First Published Apr 11, 2024, 10:02 AM IST

எவ்வளவுதான் வீட்டு பூஜை அறையில் பூஜைகள் செய்தால் பலரது வீடுகளில் அமைதி இல்லை. இத்தகைய சூழ்நிலையில் பூஜை அறையில் இருக்கும் சில வாஸ்து குறைபாடுகளை குறித்து காணலாம்.

பொதுவாகவே, அனைவரும் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்புக்காக கடவுளை வழிபடுகிறார்கள். அதுவும் குறிப்பாக இந்து மதத்தை பின்பற்றும் மக்கள் தங்கள் வீட்டில் இருந்து கடவுளை வழிபட பூஜை அறை வைத்துள்ளனர். மேலும் வீடுகளில்  தவறாமல் செய்கிறார்கள். ஆனால், அப்படி அவர்கள் செய்தும் பல வீடுகளில் அமைதி இல்லை. இதற்கு பூஜை அறையில் உள்ள வாஸ்து குறைபாடுகளே முக்கிய காரணமாகும்.
எனவே, இப்போது இந்த கட்டுரையில் பூஜை அறையில் இருக்கும் சில வாஸ்து குறைபாடுகள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..

முன்னோர்களின் புகைப்படங்கள்: வாஸ்து சாஸ்திரத்தின் படி, முன்னோர்களின் புகைப்படங்களை வீட்டு பூஜை அறைக்கு அருகிலோ அல்லது பூஜை அறைகயிலோ வைக்கக் கூடாது. மேலும் வீட்டில் இருக்கும் கடவுளுடன் முன்னோர்களின் படங்களை வைத்தால், வீட்டில் பிரச்சனைகள் ஏற்பட்டு, கடவுளும் கோபப்படுவார்.

கிழிந்த புகைப்படம்: கடவுள் சிலை இல்லாமல், அதற்கு பதிலாக வழிபாட்டில் பழைய அல்லது கிழிந்த புகைப்படத்தை வைக்க கூடாது. வீட்டு பூஜை அறையில் கிழிந்த கடவுள் படம் அல்லது கிழிந்த மதப் புத்தகத்தை வைப்பது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். அத்தகைய வீட்டில் சோகம் சூழ்ந்திருக்கும். அதுபோல, கடவுளுக்குப் படைக்கப்பட்ட உலர்ந்த பூக்களை, வீட்டு பூஜை அறையில் வைக்கக் கூடாது.

ஒன்றுக்கு மேற்பட்ட சங்கு: வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டு பூஜை அறையில் ஒன்றுக்கு மேல் சங்கு வைக்கக்கூடாது. பலர் தங்கள் வீட்டு பூஜை அறையில் பல சங்குகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் அவ்வாறு செய்வது வாஸ்து சாஸ்திரத்தின் பார்வையில் தவறானது.

இதையும் படிங்க: யாருகெல்லாம் அதிர்ஷ்டம் வேண்டும்...அப்ப 'இந்த' 6 சிலைகளை வீட்டின் பூஜை அறையில் வையுங்க..!!

உடைந்த சிலை: வாஸ்து சாஸ்திரத்தின்படி, உடைந்த சிலையை வீட்டுக் கோவிலில் வைக்காதீர்கள். அப்படிப்பட்ட சிலையை வைத்து வழிபட்டால் வீட்டில் பண பிரச்சினைகள் அதிகரிக்கும்.

இதையும் படிங்க: பூஜை அறையில் தவறுதலாக கூட 'இந்த' சிலைகளை வைக்காதீங்க..வீட்டில் நிம்மதி கெடும்..!!

பூஜைப் பொருள்: வாஸ்து சாஸ்திரப்படி, பூஜையின் போது பயன்படுத்தப்படும் பூஜைப் பொருட்களை வீட்டின் பூஜை அறையில் வைக்கக் கூடாது. மேலும், பூஜை அறையை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். வீட்டின் பூஜை அறை அசுத்தமாகவோ அல்லது அழுக்காகவோ இருந்தால், வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்காது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!