Parents beware: பெற்றோர்களே உஷார்...விக்ரம் படம் பார்த்த குழந்தைக்கு நேர்ந்த அவலம்...வெளியான பரபரப்பு தகவல்...

First Published Jun 6, 2022, 11:39 AM IST

Vikram Movie Controversy: கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை பார்த்த சிறுவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

vikram

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3 ம் தேதி படம் உலகம் முழுவதும் ரிலீசான திரைப்படம் விக்ரம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. 

vikram

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையில், கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். மேலும், இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இப்படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் பாக்ஸ் ஆஃபீஸிலும் பட்டையை கிளப்பி வருகிறது. மூன்று நாட்களில் மட்டும் படம் 150 கோடிகளை கடந்து வசூல் மழை பொழிந்து வருகிறது.

vikram

விக்ரம் படம் முழுக்க வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், இந்தப் படம் சிறப்பான த்ரில் அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்டவர்களும் நடித்திருந்த நிலையில் அனைவரும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

VIKRAM MOVIE

இது ஒருபுறம் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தாலும், மறுபுறம் விக்ரம் விக்ரம் படத்தை பார்த்த குழந்தைகள் உளவியல் ரீதியாக பாதிக்கப் படுவதாக அதிர்ச்சி கர தகவல் வெளியாகி பெற்றோர்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. 

vikram

ஆம், சென்னையில் எல்கேஜி படிக்கும் சிறுவன் விக்ரம் படத்தை பார்த்து விட்டு வந்து, வீட்டில் இருக்கும் பொருட்களை கத்தியால் குத்தி கிழிப்பது, தானாக கீழே விழுவது போன்ற செயல்களிலில் ஈடுபட்டுள்ளன. எனவே, பெற்றோர்கள் படத்திற்கு சென்றால் சிறுவர்களை வீட்டில் விட்டு விட்டு செல்வது நல்லது நேற்று படம் பார்த்த பெற்றோர்கள் யோசனை குறுகின்றனர்.

மேலும் படிக்க...Reshma: இடுப்பில் குத்திய டாட்டூ...என்ன அர்த்தம்...நெட்டிசனின் ஏடாகூடமான கேள்விக்கு நச்சுனு பதில் தந்த ரேஷ்மா

click me!