Parenting Tips : பெற்றோர்களே.. குழந்தைகள் தூங்கும் போது இவற்றை ஒருபோதும் சொல்லாதீங்க!

First Published Apr 5, 2024, 2:27 PM IST

ஒவ்வொரு பெற்றோரும் குழந்தை தூங்கும் போது குழந்தையிடம் சில வார்த்தைகள் சொல்லக்கூடாது. அது என்ன? 

குழந்தை வளர்ப்பு என்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் பெரும் ஒரு பெரிய சவாலான காரியம் என்றே சொல்லலாம். குறிப்பாக, அவர்களை தூங்க வைப்பதற்குள் படாதபாடு படுகின்றனர். பெற்றோர்கள் தூங்கினால் கூட குழந்தைகள் தூங்குவதில்லை. இது எல்லார்  வீட்டிலும் நடப்பது சகஜம் தான்.

பொதுவாகவே, குழந்தைகளை தூங்க வைக்க பொற்றோர்கள் பல கதைகளை அவர்களுக்கு சொல்லுவது வழக்கம். ஆனால், அவர்களை தூங்க வைப்பதற்காக பெற்றோர்கள் சொல்லக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. அவை என்னவென்று இங்கே தெரிந்து கொள்வோம்.. 

பேய் கதைகள்: சில பெற்றோர்கள் குழந்தை தூங்க வைப்பதற்காக, அவர்கள் பயந்தால் தூங்கிவிடுவார்கள் என்று நினைத்து பேய் கதைகளை சொல்லுவார்கள். ஆனால், அது தவறு. இப்படி செய்தால், அவர்களால் தூங்கவே முடியாது. மேலும், நிஜமாகவே பேய் வந்துவிடுமோ என்று பயப்படுவார்கள். எனவே, இந்த மாதிரி கதைகளை ஒருபோதும் குழந்தைகளை தூங்க வைக்க சொல்லாதீர்கள்.

கஷ்டப்படும் விஷயங்களை சொல்லாதீர்கள்: குழந்தைகள் தூங்கவில்லை என்றால் அவர்களை கஷ்டப்படுத்தும் விதமாகவும், மன அழுத்தம் மற்றும் சோகத்தை ஏற்படுத்தும் விஷயங்களைப் பற்றி ஒருபோதும் பேச வேண்டாம். இவை படுக்கையறையில் பேச வேண்டிய விஷயங்கள் அல்ல. உங்கள் குழந்தை அடுத்த நாள்  மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் இதை ஒருபோதும் செய்யாதீர்கள்.

மற்றவர்களுடன் ஒப்பிடுதல்: குழந்தைகளை தூங்க வைக்கும் போது குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்கவும். நீங்கள் உங்கள் குழந்தைகளை ஒப்பிடும்போது உங்கள் குழந்தையின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கும்.

நீ என்னவாக போகிறாய்?
குழந்தைகள் தூங்கும்போது எதிர்காலத்தில் என்ன செய்ய விரும்புகிறாய் என்று கேட்காதே. இப்படி கேட்க சரியான நேரமும் இல்லை. இவை அனைத்தையும் பின்பற்றுங்கள், உங்கள் குழந்தை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்.

click me!