Parenting Tips tamil : உங்கள் குழந்தைக்கு Good Touch, Bad Touch பற்றி எப்படி சொல்லிக் கொடுப்பது?

First Published Apr 2, 2024, 4:28 PM IST

உங்கள் குழந்தைக்கு குட் டச் மற்றும் பேட் டச் குறித்து எப்படி சொல்லிக் கொடுப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் இந்த நிலையில் குழந்தைகளுக்கு நல்ல மற்றும் கெட்ட தொடுதல் (Good Touch, Bad Touch) பற்றி உங்கள் பிள்ளைக்கு சொல்லிக் கொடுப்பது முக்கியமானது. இது அவர்களின் உரிமைகளைப் புரிந்துகொள்வதற்கும், நம்பகமான நபர்களின் உதவியை எப்போது பெறுவதற்கும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. எனவே உங்கள் குழந்தைக்கு குட் டச் மற்றும் பேட் டச் குறித்து எப்படி சொல்லிக் கொடுப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

உங்கள் பிள்ளையின் வயதுக்கு ஏற்ற மொழியைப் பயன்படுத்தி அவர்களிடம் குட் டச், பேட் டச் குறித்த விவாதங்களைத் தொடங்குங்கள். உங்கள் பிள்ளை எந்த தயக்கும் பயமும் இன்றி உங்களிடம் கேள்வி கேட்க பாதுகாப்பான இடத்தை உருவாக்கவும். இது வெளிப்படையான மனப்பான்மையை ஊக்குவிக்கிறது. மேலும் குழந்தைகள் தங்கள் உணர்வுகள் மற்றும் அனுபவங்களைப் பற்றி பேசுவதற்கு வசதியாக உணர உதவுகிறது

குழந்தைகளுக்கு தங்கள் உடல் மீது கட்டுப்பாட்டைக் கற்பிக்கவும். மற்றவர்கள் தங்கள் உடல் பாகங்களை தொட வேண்டாம் என்று சொல்ல அவர்களுக்கு உரிமை உண்டு என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். மற்ற நபர் தொடும் போது அது சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்றால் அது யாராக இருந்தாலும், அவர்களை தொட வேண்டாம் என்று கூறுங்கள்..

பாதுகாப்பான தொடுதல் எனில் அது வசதியாகவும் அன்பாகவும் உணரவைக்கும், குடும்பத்தின் அணைப்புகள் போன்றது என்பதை அவர்களுக்கு புரியவைக்கவும்.. அதே நேரம் பாதுகாப்பற்ற தொடுதலை அவர்கள் சங்கடமாக அல்லது பயமாக உணர வைக்கும் என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவும்.

குழந்தைகள் தங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும், நம்பவும் உதவுங்கள். ஒரு விஷயம் சரியாக இல்லை என்பதை உணரும் அதை நம்ப கற்றுக்கொள்ளுங்கள். தங்களை சுற்றி உள்ள மக்கள் மற்றும் சூழ்நிலைகளைப் பற்றிய அவர்களின் உள்ளுணர்வை நம்பவும் அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பெற்றோர், ஆசிரியர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் போன்ற நம்பகமான பெரியவர்களை தங்கள் உதவிக்காகச் செல்லலாம். இந்த நபர்கள் எந்த முன் தீர்ப்பும் இல்லாமல் அவர்களைக் கேட்பார்கள் மற்றும் ஆதரிப்பார்கள் என்பதை உங்கள் குழந்தைக்கு புரியவையுங்கள்.

உங்கள் குழந்தையை யாராவது தகாத முறையில் தொட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக கூற வேண்டும். அவர்கள் தொடும் போது "NO" என்று கூறுவதும், விரைவாக வெளியேறுவதும், உடனடியாக நம்பகமான பெரியவரிடம் சொல்வதும் அடங்கும்

உடல் பாதுகாப்பு பற்றிய தொடர்ச்சியான நினைவூட்டல்களை உங்கள் குழந்தைக்கு வழங்குகள். குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். இது அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதில் நம்பிக்கையை உணரவும் உதவும்.

click me!