Palani Temple Undiyal: பழனி முருகன் கோயிலில் கொட்டும் உண்டியல் காணிக்கை.. அள்ள அள்ள தங்கம்.. குவிந்த கோடிகள்!

First Published May 10, 2024, 8:57 AM IST

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றதில் பக்தர்கள் காணிக்கை வரவு ரூ,2.24 கோடியை தாண்டியது.

Palani Murugan Temple

அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடான பழனி முருகன் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் தரிசனம் செய்ய தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் வருகை தருவது வழக்கம்.

Murugan Temple

இந்நிலையில், கல்லூரி, பள்ளிகள் முழு ஆண்டுத்தேர்வு தொடர் விடுமுறை காரணமாக கடந்த 27  நாட்களில் பழனி முருகன் கோயில் உண்டியல் நிறைந்ததால் வியாழக்கிழமை திறக்கப்பட்டு கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.  நிகழ்ச்சியில் ஐநூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவியர்கள், ஆசிரியர்கள், திருக்கோயில் அலுவலர்கள் பங்கேற்றனர்.  

Palani Murugan Temple Undiyal Collection

இதில் பக்தர்கள் காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் இரண்டு கோடியே 24  இலட்சத்து 86 ஆயிரத்து 568 கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், பட்டை, தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன பிஸ்கட், காசுகள், சிறிய வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.  

Gold Silver

தங்கம் 848 கிராமும், வெள்ளி 13 ஆயிரத்து 575 கிராமும் இருந்தது. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 409  கிடைத்தன.  இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

click me!