சென்னையில் 3.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்.. அலறிய பொதுமக்கள்.. சாலையில் தஞ்சம்?

First Published Mar 15, 2024, 8:11 AM IST

சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.9ஆக பதிவாகியுள்ளது. 

Tirupati

ஆந்திர மாநிலம் திருப்பதியில் நேற்று இரவு 8.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.9ஆக பதிவாகி உள்ளது. கிழக்கு வடகிழக்கில் 58 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Chennai Earthquake

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சென்னை அருகிலும் ஆந்திரா – தமிழ்நாடு எல்லைப் பகுதியான கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டை பகுதியிலும் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை உணர்ந்த சென்னை மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்து சாலையில் தஞ்சமடைந்தனர். 

இதையும் படிங்க: தமிழகத்தில் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தேர்வு தேதி அறிவிப்பு! எப்போது விண்ணப்பிக்கலாம்?

Earthquake

இதேபோன்று சென்னையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி அண்ணா சாலை ஒயிட் சாலை போன்ற இடங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

click me!