Good Bad Ugly: 90ஸ் நாயகிகளுக்கு அடித்த ஜாக்பாட்! அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இணையும் ஸ்டார் ஹீரோயின்ஸ்

First Published Apr 29, 2024, 2:10 PM IST

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள அஜித்தின் 63-வது படமான குட் பேட் அக்லி-யில் இரண்டு ஸ்டார் ஹீரோயின்கள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Good Bad Ugly

நடிகர் அஜித்குமாரின் 62-வது படமான விடாமுயற்சி, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, ஆரவ், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ரெஜினா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் முழுக்க முழுக்க அஜர்பைஜானில் படமாக்கப்படது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மட்டுமே எஞ்சி உள்ளது.

simran

விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் முடியும் முன்னரே குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட் ஆனார் அஜித். அப்படத்தை மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்கிற தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி நடிகர், நடிகைகள் தேர்வும் நடக்கிறது.

இதையும் படியுங்கள்... Ajith : அஜித் - வடிவேலு இடையே அப்படி என்ன தான் பிரச்சனை? 20 ஆண்டுகளாக ஏகே படங்களில் வடிவேலு தலைகாட்டாதது ஏன்?

Meena

அந்த வகையில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் கசிந்த நிலையில், தற்போது அப்படத்தில் மேலும் இரண்டு 90ஸ் நாயகிகள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் வேறு யாருமில்லை நடிகைகள் மீனா ம்ற்றும் சிம்ரன் தான். இவர்கள் இருவருமே தனித்தனியாக அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தாலும், முதன்முறையாக இருவரும் சேர்ந்து அஜித்துடன் நடிக்க உள்ளனர்.

vidaamuyarchi delayed

குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு முதலில் ஜூன் மாதம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதில் சிறிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. அதன்படி விடாமுயற்சி ஷூட்டிங் தாமதம் ஆவதால் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதமே தொடங்க உள்ளதாம். அப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த பின்னரே அஜித் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Radha: சுந்தரா ட்ராவல்ஸ் நடிகை ராதா தாக்கியதில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி! போலீசில் பரபரப்பு புகார்!

click me!