அடேங்கப்பா! ஒரே நாளில் ரூ.290 கோடிக்கு மது விற்பனை! கல்லா கட்டிய தமிழக அரசு! எந்த மண்டலத்தில் அதிகம் தெரியுமா?

First Published Apr 18, 2024, 10:16 AM IST

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.290 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

lok sabha election 2024

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளில் முதல் கட்டமாக  நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், வாக்குப்பதிவின் போது எந்த வித சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாத வகையில் தடுக்க மதுபான கடைகள் 3  நாட்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 

TASMAC Shop

இதன் காரணமாக மதுபிரியர்கள் முன்னெச்சரிக்கையாக 3 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி சென்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.  இந்நிலையில் நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 289 கோடியே 29 லட்சத்திற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  வழக்கமான விற்பனையை விட இரண்டரை மடங்கு கூடுதலாக மது விற்பனை நடைபெற்றுள்ளது. 

Tasmac liquor Sale

மண்டல வாரியாக மதுபான விற்பனையில் சென்னை முதல் இடம் பிடித்துள்ளது. அதன்படி, அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ஒரே நாளில் 68 கோடியே 35 லட்சத்திற்கும், திருச்சி மண்டலத்தில் 58 கோடியே 65 லட்சத்திற்கும், சேலம் மண்டலத்தில் 57 கோடியே 30 லட்சத்திற்கும், மதுரை மண்டலத்தில் 55 கோடியே 87 லட்சத்திற்கும், கோவை மண்டலத்தில் 49 கோடியே 10 லட்சத்திற்கும் மதுபான விற்பனை நடைபெற்றுள்ளது. 

இதையும் படிங்க: Today Gold Rate in Chennai: சரசரவென குறைந்த தங்கம்.. வாங்க இதுதான் சரியான நேரம்! இன்றைய நிலவரம் இதோ!

TASMAC Shop Holiday

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான ஜுன் 4ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது இதுபோன்று விற்பனை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.  

click me!