D Imman : இதற்கு...நீங்கள் இறந்திருக்கலாம் என மகள்கள் சொல்கிறார்கள்...? இமானை வெறுப்பேற்றும் மாஜி மனைவி...

First Published May 19, 2022, 7:02 PM IST

D Imman: பிரபல இசையமைப்பாளராக இருக்கும் டி.இமான் சமீபத்தில் தனது முதல் மனைவியை சட்டப்படி பிரிந்த நிலையில், கடந்த வாரம் மறுமணம் செய்துள்ளார்.

d-imman

இவரின் இசையில், விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற‘கண்ணான கண்ணே’ பாடலுக்கு தேசிய விருதும் இமானுக்கு கிடைத்தது. இசைத்துறையில் சிறப்பாக பயணம் சென்று கொண்டிருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை அவருக்கு கசப்பானதாக இருந்துள்ளது.

D imman family

இதனால் 12 ஆண்டுகளாக மோனிகா ரிச்சார்டு என்பவருடன் திருமண பந்தத்தில் இருந்த இமான், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிவதாக அறிவித்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும், சட்டப்படி விவாகரத்தும் பெற்றார்.  

D imman

மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்த இசையமைப்பாளர் டி. இமான், அண்மையில் எமிலி என்பவரை மே 15ம் தேதி சென்னையி 2வது திருமணம் செய்து கொண்டார். எமிலியின் மகள் நேத்ராவை தன் மூன்றாவது மகளாக ஏற்றிருக்கிறார். இதையடுத்து, இமானின் 2வது திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

d imman

இந்நிலையில் இமானின் முன்னாள் மனைவியான மோனிகா ரிச்சர்டோ, மார்ச் மாதம் போட்ட ட்வீட் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. விவாகரத்து பற்றி இமான் அளித்த பேட்டியின் யூடியூப் இணைப்பை வெளியிட்டு, மோனிகா கூறியுள்ளதாவது, கடந்த இரண்டு ஆண்டுகளாக நீங்கள் உங்களின் மகள்களை பார்க்கவே இல்லை. நீங்கள் இறந்திருக்கலாம் என அவர்கள் விரும்புகிறார்கள். 

d imman

ஆனால் நீங்களோ, அவர்களுக்காக மறுமணம் செய்வதாக கூறுகிறீர்கள். இமான் நீங்கள் படங்களில் நடிக்கவும் தொடங்கலாம். என் அமைதி தான் உங்களுக்கு தைரியம் அளித்தது என்றால், அதற்காக வருத்தப்படுகிறேன். திருமண வாழ்த்துக்கள் இமான் என்று பதிவிட்டுள்ளார். 

d imman

இமானின் திருமணத்தன்று மோனிகா போட்ட ட்வீட்டிலும், உன் அப்பாவிடம் இருந்து என் குழந்தைகளை நான் பாதுகாப்பேன், தேவைப்பட்டால் அந்த புதுக் குழந்தையையும் பாதுகாப்பேன் என்று குறிப்பிட்டிருந்தார்.  இதன் மூலம், மோனிகா  என்ன சொல்ல வருகிறார். இசையமைப்பாளர் டி.இமானின் இரண்டாவது திருமணத்தால், மனம் உடைந்த மோனிகா வெறுப்பேற்றுவதற்காக இப்படி ட்விட் போடுகிறாரோ..? என்று சிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 மேலும் படிக்க....டான் படம் பார்த்து கண்ணீர் விட்ட ரஜினிகாந்த்...மனதை தொட்ட அந்த காட்சி கேட்டு? நெகிழ்ந்து போன சிவகார்த்திகேயன்

click me!