Vikram Movie: வசூலில் புதிய மைல்கல்லை எட்டிய விக்ரம்....40 வகை உணவுகளுடன் விருந்து வைத்த கமல்...

First Published Jun 18, 2022, 12:04 PM IST

Vikram Movie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் நடிப்பில் விக்ரம் திரைப்படம் கடந்த ஜுன் 3ம் தேதி மாஸ் வசூல் வேட்டை நடத்தியது. இப்படம் வெளியான நாள் முதல் பட்டிதொட்டி எங்கும் கலக்குகிறது. படம் ரிலீஸ் ஆகி 2 வாரம் கடந்த நிலையிலும் திரையில் ஹவுஸ் புல்லாக ஓடுகிறது.

Kamal Haasan Vikram

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் நடிப்பில் விக்ரம் திரைப்படம் கடந்த ஜுன் 3ம் தேதி மாஸ் வசூல் வேட்டை நடத்தியது. இப்படம் வெளியான நாள் முதல் பட்டிதொட்டி எங்கும் கலக்குகிறது. படம் ரிலீஸ் ஆகி 2 வாரம் கடந்த நிலையிலும் திரையில் ஹவுஸ் புல்லாக ஓடுகிறது.

இந்த படத்தில் கமலுடன் இணைந்து, விஜய்சேதுபதி, பக்த் பாசில்,  சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  லோகேஷின் பக்கா ஆக்‌ஷன் திரைப்படமாக வெளியான விக்ரம் திரைப்படம் இதுவரை இல்லாதளவு வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.  தமிழ் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, வட இந்தியா உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு தான்.

Kamal Haasan Vikram

அதன்படி, உலகம் முழுவதும் படம் 10 நாட்களில் ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் படம் மொத்தமாக இன்று வரை ரூ. 350 கோடி வரை வசூலித்துள்ளதாம். இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 147 கோடி வரை வசூல் சாதனை செய்து ஆல் டைம் ரெக்கார்ட் செய்துள்ளது. விரைவில் தமிழகத்தில் பாகுபலி 2 வசூலை முறியடித்துவிடும் என்கின்றனர் திரையுலக வல்லுநர்கள். 

Kamal Haasan Vikram

இதனால் லோகேஷ் கனகராஜ், கமல் ஆகியோர் செம்ம குஷியில் இருக்கிறார்களாம். சமீபத்தில், கமல்ஹாசன் , இயக்குனருக்கு சொகுசு காரையும், உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு பைக்குகளையும் பரிசாக வழங்கினார். இதையடுத்து, விக்ரம் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு விலையுயர்ந்த பிராண்டட் கைக்கடிகாரத்தை பரிசாக அளித்துள்ளார் .

Kamal Haasan Vikram

இந்த நிலையில், கமல் அவர்கள் விக்ரம் வெற்றி விழாவை கொண்டாடியுள்ளார். அதில், விக்ரம் படத்தின் வெற்றி விழாவில் விருந்தினர்களுக்கு 40 வகையான விதவிதமான உணவுகள் பரிமாறப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் இன்று நடைபெற்ற இந்த விழாவில் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

vikram

இதையடுத்து, இதில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு நாட்டுக்கோழி சூப். முருங்கை கீரை சூப், மாம்பழ ரோல், லிச்சி பழ சந்தேஷ், மட்டன் கீமா உருண்டை, மதுரை மட்டன் கறி தோசை, முட்டை தோசை போன்றவை பரிமாறப்பட்டது.

 
 மேலும் படிக்க...Veetla Vishesham: ஆர்.ஜே. பாலாஜி ஹேப்பியோ..ஹேப்பி..முதல் நாள் முடிவிலே கோடியில் வசூல் செய்த வீட்ல விசேஷம் படம்

click me!